திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய்யை ஓரங்கட்ட நினைக்கும் தனுஷின் மாஸ்டர் பிளான்.. ஒட்டுமொத்தமாக செய்யும் சதி வேலை

விஜய்யின் லியோ படத்தை ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே ரிலீஸ் தேதியை முடிவு செய்து அக்டோபர் 19ஆம் தேதி அன்று திரையரங்கில் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். அதன்படியே படப்பிடிப்பு அனைத்தையும் எந்தவித காரணத்தை கொண்டும் நிறுத்தப்படாமல் நடத்தி வந்தார்கள். அதனால் தற்போது லியோ படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி இருக்கிறது.

மேலும் விஜய் படத்துடன் வேறு எந்த படங்களும் வருவது குறித்து அறிவிப்புகள் வராமல் இருந்தது. அதனால் இப்படத்தை முக்கியமான விடுமுறை தினத்தன்று வெளியிட்டால் தொடர்ந்து ஐந்து நாட்கள் லீவு வரும். அத்துடன் அனைத்து தரப்பட்ட ரசிகர்களும் பார்ப்பதற்கு மிகப் பெரிய வாய்ப்பாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு அந்த தேதியை லாக் செய்திருந்தார்கள்.

Also read: விஜய்யுடன் நடிக்கும் காட்சியில் வம்பு பண்ணிய வடிவேல்.. சூட்டிங் ஸ்பாட்டில் பிரபுதேவாவுடன் மோதிய வைகைப்புயல்

ஆனால் இவர்கள் தந்திரமாக போட்ட திட்டத்தை தவிடு பொடியாக ஆக்க வேண்டும் என்று இந்த தேதியை குறி வைத்து இறங்குகிறார் தனுஷ். அதாவது லியோ படக்குழு திட்டத்தை உன்னிப்பாக கவனித்த தனுஷ் அவருடைய கேப்டன் மில்லர் படத்தையும் அதே தேதியில் ரிலீஸ் செய்யலாம் என்று யோசித்து வருகிறார்.

ஆனால் இப்படப்பிடிப்பு எப்பொழுது முடியும் என்று தெரியாத நிலையில் இவர்கள் ஏற்கனவே தீபாவளி அன்று வெளிவரும் என்று குத்து மதிப்பாக சொல்லி வைத்திருந்தார்கள். இப்பொழுது திடீரென்று கேப்டன் மில்லர் படப்பிடிப்பு மிக வரசலாக போய்க்கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் அக்டோபர் மாதம் விடுமுறை நாட்களில் வெளியிட வேண்டும்.

Also read: அஜித், விஜய் விட நாங்க ஒன்னும் கொறஞ்சவங்க இல்ல.. மேடையில் குமுறிய ஸ்ருதிஹாசன்

அதுவும் லியோ படம் திரையரங்களில் வரும் அதே நாளில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் மற்றும் தனுஷ் முடிவெடுத்து இருக்கிறார்கள். ஆனால் விஜய் படம் வருகிறது என்று தெரிந்ததால் இதுவரை எந்த படங்களும் போட்டி போடுவதற்கு தயாராக இல்லை. ஆனால் தனுஷ்,  விஜய்யை எப்படியாவது இந்த படத்தின் மூலம் ஓரங்கட்ட வேண்டும் என்று மாஸ்டர் பிளான் போட்டு வருகிறார்.

அத்துடன் கேப்டன் மில்லர் மிகப் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகளில் வெளியிடப் போகிறார்கள். இதனால் கண்டிப்பாக விஜய் படத்திற்கு மிகப்பெரிய போட்டியாக அமையும் என்பதை தெரிந்து கொண்டு கேப்டன் மில்லர் பட குழு சதி வேலையை செய்து வருகிறது.

Also read: விஜய்யை நம்ப வைத்து கழுத்தறுத்த இயக்குனர்.. கேஜிஎஃப் நடிகரை வைத்து காய் நகர்த்தும் சன் பிக்சர்ஸ்

Trending News