வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

தனுஷுக்கு நடந்த கதைதான் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’.. அவர் பண்ணுன அத்தனை சேட்டையும் படத்துல இருக்காம்

கடந்த ஜூலையில் வெளியான ராயன் 100 கோடி வசூல் குவித்தது. அதன்பின், தனுஷின் அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகும் நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் படத்தை இயக்கியுள்ளார்.

இதில், பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் இதை தயாரித்துள்ளது. இப்படத்தில் ‘கோல்டன் ஸ்பேரோ’ பாடல் யூடியூப்பில் 100 மில்லியன் வியூஸை பெற்றுள்ளது.

தனுஷின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் தான் கதையா?

இப்படம் காதல், காமெடி கலந்து உருவாகியிருக்கலாம் என கூறப்படுகிறது. தனுஷின் வாழ்க்கையில் நடந்த காதல், அவர் சக நடிகர்களுடன் இணைந்து நடத்திய பார்டி உள்ளிட்ட விஷயங்களை அவர் படமாக இயக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

முதல் படத்தில் முதியவர்களின் காதல், 2வது படத்தில் தங்கை செண்டிமெண்ட், 3 வதாக அவர் இயக்கி வரும் நிலவுக்கு நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் படம் அவர் இளமைக் கால நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டதாக பேசப்படுகிறது.

விரைவில் படம் வெளியாகவுள்ளதால் படம் வெளியான பின், இப்படம் பற்றிய முழு விவரமும் தெரிந்துவிடும்.

- Advertisement -

Trending News