வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கருத்து கேட்டு கருத்துபோன ப்ளூ சட்டை மாறன்.. தனுஷ் வாத்தியை வச்சி செய்து விமர்சனம்

சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து படங்களை தனது யூடியூப் சேனல் மூலம் விமர்சனம் செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் வாத்தி படத்தை விமர்சனம் செய்து இருந்தார். வாத்தி படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ளது.

கல்வியால் எப்படி பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதை பற்றிய படம் தான் வாத்தி. இது குறித்து மாறன் கூறுகையில் முதல் பாதி ரசிகர்கள் பார்க்கும் படி இருப்பதாகவும் இரண்டாவது பாதியில் அப்படியே தெலுங்கு சாயலை கொண்டு வந்துள்ளார்.

Also Read : வாத்தியாராக அதிரடி காட்டும் தனுஷ்.. சுடச்சுட வெளிவந்த ட்விட்டர் விமர்சனம்

மேலும் முந்தைய தெலுங்கு படங்களான வாரிசு, பிரின்ஸ் படங்கள் போல வாத்தி படம் இருக்காது என்று நினைத்த நிலையில் மொத்தமாக சேர்த்து மசாலாவாக கொடுத்துள்ளார்கள். வாத்தி படத்தின் கதையை வைத்து முன்பே பல படங்கள் வெளியாகி உள்ளது.

ஜோதிகா நடிப்பில் வெளிவந்த ராட்சசி, சாட்டை எல்லாம் இதே கதை தான். இருந்தாலும் ஏதாவது வித்தியாசமாக சொல்வார்கள் என்று எதிர்பார்த்தால் படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஒன்றுமே இல்லை. ஹீரோ என்றால் கண்டிப்பாக ஃபைட் சீன் இருக்க வேண்டும் என படத்தில் சண்டை காட்சிகள் வைத்துள்ளார்கள்.

Also Read : இயக்குநர்களை நம்பி மோசம் போன டாப் 3 ஹீரோக்கள்.. மரண பயத்தில் வாத்தி தனுஷ்

தனுஷ் மற்றும் சமுத்திரக்கனி இருவருமே இந்த படத்தில் புத்தியால் வேலை செய்யக்கூடியவர்கள். ஆகையால் புத்தியால் இவர்கள் மோதிக்கொண்டால் படம் நன்றாக இருந்திருக்கும். அதை விட்டுவிட்டு தேவையில்லாமல் பத்து பேரை அடித்து துவம்சம் செய்வது போல் காட்சி வைத்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் இந்த படம் கருத்து சொல்வதற்காக எடுத்துள்ளனர். இப்படி கருத்து சொல்ல வேண்டும் என்றால் மேடையில் வந்த பேசுங்கள் அல்லது வாட்ஸ் அப்பில் அனுப்புங்கள். அதை விட்டுவிட்டு படத்தில் கருத்து சொல்கிறேன் என்று இது போன்ற படங்களை எடுக்காதீர்கள். இப்படி கருத்துகேட்டு, கருத்துகேட்டு கருத்து போய் விட்டேன் என்று புலம்பித் தவிக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

Also Read : எக்ஸ் பொண்டாட்டிக்கு போட்டியாக இறங்கிய தனுஷ்.. லால் சலாம் படத்தில் ஏற்பட்ட சிக்கல்

Trending News