வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தனுஷ் பத்திரிக்கையால் சிம்புக்கு வந்த பழி.. பொண்ணு, சினிமா இரண்டையும் விட்டுட்டானே என ஆதங்கத்தில் அடித்த டிஆர்

சிம்பு தற்போது சினிமாவில் தனது செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கி சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் சிம்புவின் தந்தை டி ஆர்-க்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டது. இதற்கு காரணம் சிம்புவின் சகோதர், சகோதரிக்கு திருமணமாகியும் இன்னும் சிம்பு சிங்கிளாகவே இருப்பதை நினைத்து தான் அவருக்கு மனதளவிலும், உடல் அளவிலும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சிம்பு ஆரம்ப காலத்தில் பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் சிம்பு இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்பு இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.

Also Read : கோலிவுட்டின் டாப் 10 ஹீரோக்கள் திருமணம் செய்த வயது தெரியுமா.? 21 வயதில் சிம்பு காதலியை தட்டி தூக்கிய தனுஷ்

அதுமட்டுமின்றி ரஜினியும் இவர்களது காதலுக்கு ஒத்துக்கொள்ள வில்லையாம். இதைத்தொடங்க ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சிம்பு இந்த காதல் தோல்வியை வைத்து தான் மன்மதன் படத்தை எடுத்தார் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தனுஷின் அப்பா கஸ்தூரிராஜா டி ராஜேந்திர் வீட்டிற்கு சென்று திருமண பத்திரிக்கையை கொடுத்து இருக்கிறார். அதைப் பார்த்து அப்போது டி ராஜேந்தர் சோகத்தில் இருந்தாராம். அந்த சமயத்தில் காதல் சுகுமார் மற்றும் காதல் குகன் டி ஆர் வீட்டுக்கு வந்துள்ளனர்.

Also Read : ஸ்கூல் பையனாக நடித்து அசத்திய 5 ஹீரோக்கள்.. தொட்டிலில் போட்டா கூட செட்டாகும் தனுஷ்

அப்போது காதல் குகன் மன்மதன் படத்தில் சிம்பு பின்னி பெடல் எடுத்து விட்டார். அந்தப் படத்தையே அவர்தான் தாங்கி பிடித்துள்ளார் என்று ஆகா ஓகோ என பேசினாராம். ஆனால் எல்லா வேலையும் சிம்பு செய்துவிட்டு வேறு ஒருவரின் பெயரை போட்டு இருக்கிறார்கள் என்று சொல்லி உள்ளார்.

மேலும் கீழே இருந்த ஐஸ்வர்யா திருமண பத்திரிகையை பார்த்துவிட்டு சிம்பு இப்படி எல்லாத்தையும் விட்டுக் கொடுத்தது போதாது என்று கல்யாணத்தையும் விட்டுக் கொடுத்து விட்டாரே என்று கூறியுள்ளார். இதற்கு கோபப்பட்ட டி ஆர் என் மகன் தன்னை நம்பி சூப்பர் ஸ்டார் ஆனவன், அடுத்தவன் பெண்ணை நம்பி இல்லை என வெளுத்து வாங்கியுள்ளார். இந்த சம்பவத்தை காதல் சுகுமார் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Also Read : 2022-ல் வெளிவந்த உடனே ட்ரெண்டான 10 பாடல்கள்.. விஜய்க்கு டஃப் கொடுத்த சிம்பு

Trending News