புதன்கிழமை, ஜனவரி 15, 2025

நல்ல விஷயத்துக்கு ஏன் போட்டோ போட்டு விளம்பரம் பண்ணனும்.? ரசிகர் கேட்ட கேள்விக்கு பதிலடி கொடுத்த தர்ஷா!

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் அவதிப்பட்டு வரும் இந்த சூழ்நிலையில் பல பிரபலங்கள் உதவி செய்து வருகின்றனர். தினமும் வேலைக்கு செல்லும் தினக்கூலி, ரோட்டோரமாக வாழ்வார்கள் என்று வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்களுக்கு தமிழக அரசும் ஒரு புறம் உதவி செய்து தான் வருகிறது.

ஆனால் சினிமா பிரபலங்கள் சின்னதாக ஏதாவது உதவி செய்து விட்டால் அதை பெரிதுபடுத்தி சமூக வலைதளங்களில் வைரலாக்கி விடுகின்றனர்.

முள்ளும் மலரும் என்ற சீரியல் மூலம் அறிமுகமான தர்ஷா குப்தா இவர் ரோட்டோரமாக அவஸ்தைப்படும் ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறார்.

அதனை புகைப்படமாக எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். அதை பார்த்த ரசிகர் ஒருவர் நீங்க செய்வது நல்ல விஷயம் தான், அதை ஏன் போட்டோ போட்டு பப்ளிசிட்டி பண்றீங்க என்பது போன்ற கேள்வி எழுப்பியிருந்தார்.

dharsha-gupta
dharsha-gupta

அதற்கு பதில் அளித்த தர்ஷா என்னைப் போல என் ரசிகர்களும் உதவி செய்வார்கள் அவர்களை ஊக்குவிக்க தான் இதுபோன்ற புகைப்படத்தை வெளியிடுகிறேன் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

dharsha-gupta
dharsha-gupta

தற்போது விஜய் டிவியின் பிரபல சீரியலான செந்தூரப்பூவேயில் வில்லியாக நடித்து வருகிறார்.

Trending News