ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

சகுனி வேலையை ஆரம்பித்த ஆனந்தி.. பேரை கெடுத்து கொண்ட தர்ஷிகா, பிக்பாஸ் 8

Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்த நிலையில் வீடு இப்போது ஒன்றாக மாறி இருக்கிறது. ஆண்கள் பெண்கள் இருவரும் இணைந்து தங்களுடைய ஆட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அதில் நேற்றைய நாள் பரவாயில்லை என்ற ரகத்தில் இருந்தது.

இந்த வாரம் தீபக் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ள நிலையில் அதை அவர் சரியாகவே செய்து வருகிறார். பிக் பாஸ் கூட இதற்காக பாராட்டு தெரிவித்தார். அதே சமயம் வீட்டில் சத்தமில்லாமல் ஒரு லவ் ட்ராக் ஓடிக்கொண்டிருக்கிறது.

கடந்த வாரமே இது வெட்ட வெளிச்சமான நிலையில் இந்த வாரம் பார்வையாளர்கள் அந்த ரெண்டு முட்டா பீசையும் தூக்கி வெளிய போடுங்க என கொந்தளித்து வருகின்றனர். அந்த அளவுக்கு விஷால் தர்ஷிகா இருவரும் தேவையில்லாத வேலையை பார்ப்பது போல் தெரிகிறது.

தர்ஷிகா, விஷால் மீது எனக்கு கிரஷ் உள்ளது என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். ஆனால் விஷால் கழுவுற தண்ணில நழுவுற மீன் போல் இருக்கிறார். இதை பார்க்கும் போதே இது லவ் இல்ல எலவு என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

காதல் மயக்கத்தில் இருக்கும் தர்ஷிகா

இதில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தர்ஷிகா பிரண்ட்ஷிப் காதல் எல்லாம் என்னுடைய விளையாட்டை பாதிக்கும் என்றால் அது தேவையே கிடையாது என கோபமாக பேசுகிறார். அவருக்கு பவித்ரா ஆனந்தி இருவரும் அறிவுரை சொல்கின்றனர்.

இதில் ஆனந்தி வழக்கம் போல சகுனி வேலை பார்த்துள்ளார். இதற்கு முந்தைய சீசன் ஒன்றில் இப்படித்தான் ஒரு பையனுக்கு இரண்டு பேர் அடிச்சுக்கிட்டாங்க. அந்த மாதிரி பேச்சு வரப்போகுது என நாசுக்காக கொளுத்தி போட்டார்.

தோழி என்ற முறையில் பவித்ரா தர்ஷிகாவுக்கு எச்சரிக்கை கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். ஆனால் காதல் மயக்கத்தில் அவர் எதையும் காதில் வாங்கவில்லை. இதில் விஷால் ப்ளே பாய் போல் நடந்து கொள்வதும் எரிச்சலை கிளப்புகிறது.

ஆக மொத்தம் இந்த பஞ்சாயத்து பூதாகரமாக வெடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. ஆரம்பத்தில் கடுமையான போட்டியாளராக இறுதிவரை வருவார் என தர்ஷிகாவுக்கு ஒரு நல்ல பேர் இருந்தது. அதை கெடுத்துக்கொண்டு விரைவில் வீட்டை விட்டு வெளியேறும் நிலையும் அவருக்கு ஏற்படலாம்.

Trending News