Dharuva Natchathiram movie: துருவ நட்சத்திரம் பட வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர் ராஜன் கூறுகையில் “படம் எடுக்க வருபவர்கள் ரிலீஸ் பண்ணும் சக்தி இருந்தால் மட்டும் படம் எடுங்கள்” என்று கூறியது திரைத்துறை எவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்தி உள்ளது.
“நெவர் கிவ் அப்” எனஉறுதியுடன் இருக்கும் கௌதம் வாசுதேவ் மேனுக்கோ 60 கோடி கடன் பிரச்சனை. 10 கோடியே சமாளித்த நிலையில் இன்னும் 50 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. விக்ரமின் சம்பளமோ 15 கோடி. ஆக்சன் உடன் கூடிய திரைக்கதை படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் பல திருப்பங்களை மேற்கொண்டு வருகிறது.
கௌதமின் கடன் பிரச்சனையை தீர்க்க ஏன் யாரும் முன் வரவில்லை என்ற கேள்விக்கு இவரின் நேர்மையற்ற தன்மையை காரணம் என கூறப்படுகிறது “எனை நோக்கி பாயும் தோட்டா” படத்தில் இதே நிலைமை ஏற்பட்டபோது ஐசரி கணேஷ் 25 கோடி கடன் கொடுத்து படம் வெளிவர உதவியுள்ளார். ஆனால் இன்றுவரை அந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை என புகார் கூறியுள்ளார்.
Also read: மன நிம்மதி இல்லாமல் தவிக்கும் கௌதம் மேனன்.. கை கட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்க்கும் விக்ரம்
இது எப்படி இருக்க கடன் கொடுக்க மறுக்கின்றனர். இதனை தொடர்ந்து நாயகன் விக்ரம் கால்ஷீட் மட்டும் தான் கொடுக்கலாம் காசு கொடுத்தால் தன் காசு உண்டியலில் போட்ட காசாகி விடுமோ திரும்பி வராதோ என பயப்படுகிறார்.
ட்ரெய்லரின் போது பல மில்லியன் ரசிகர்களைக் கொண்டு சாதனை புரிந்த துருவ நட்சத்திரம் திரைக்கு வந்து ஜொலிக்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில் கடன் கொடுத்த முதலைகளோ சரியான சமயத்தில் கெளதமை சுற்றி வளைத்து கொண்டு இருக்கின்றனர். இந்த மாதம் வெளிவரும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துக் கொண்டே வருகின்றனர்.
Also read:கட்டத்துரைக்கு கட்டமே சரியில்ல.. நாலா பக்கமும் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு போடப்பட்ட கேட்