வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

தனுஷின் சூப்பர் ஹிட் படத்தில் நடிக்க மறுத்த நடிகை.. அதன் பின் எக்கச்சக்க பட வாய்ப்பு

மலையாளத்தில் இருந்து வந்த நடிகை தமிழ் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு முன்னணி நடிகர்களுக்கு தங்கை, ஹீரோயின் என பல படங்களில் நடித்துள்ளார். தற்போது திருமணத்திற்குப் பின்பு திரைப்படங்களில் நடிக்காமல் சினிமாவை விட்டு ஒதுங்கி உள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மொழி படங்களில் நடித்தவர் நடிகை சரண்யா மோகன். காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு படிப்பில் கவனம் செலுத்தி வந்த சரண்யா மோகனுக்கு ஒரு நாள் ஒரு கனவு என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இப்படத்தின் ரிலீசுக்கு பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான யாரடி நீ மோகினி படத்தில் நடிக்க படக்குழு இவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது சரண்யா மோகன் எனக்கு நடிக்க விருப்பமே இல்லை என மறுத்த போதும் ஸ்கிரீன் டெஸ்டுக்கு மட்டும் வாங்கள் என்று சொன்னார்களாம். அங்கு நிறைய பேர் ஆடிஷனுக்கு வந்திருந்ததால் தனக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது என சந்தோஷப்பட்டாராம் சரண்யா மோகன்.

ஆனால் கடைசியில் சரண்யா மோகன் தான் ஸ்க்ரீன் டெஸ்டில் செலக்ட் ஆனாராம். முதலில் மறுத்த சரண்யா பின்பு அவர்களது அன்பு கட்டளையால் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். யாரடி நீ மோகினி படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார் சரண்யா மோகன். இப்படத்தில் கிராமத்து சாயலில் பாவாடை தாவணியுடன் நடித்திருந்தார்.

யாரடி நீ மோகினி படத்தில் தனுஷ், சரண்யா மோகனுக்கும் லவ் ட்ராக் போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தது. அதோடு மட்டுமல்லாமல் பாலக்காட்டு பக்கத்திலே என்ற ரீமேக் பாடலில் தனுஷ், சரண்யா இருவரும் டூயட் பாடலில் நடனமாடி இருந்தார்கள். அப்போது இந்த பாடல் ட்ரெண்ட் ஆகியிருந்தது.

இப்படத்தில் சரண்யா மோகனின் வரவேற்பை தொடர்ந்து மற்ற பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்ததாம். அப்போது பல படங்களில் நடித்தாராம் சரண்யா மோகன். யாரடி நீ மோகினி படத்தை மிஸ் செய்திருந்தால் இந்த அளவுக்கு ரசிகர்களின் கவனத்தை பெற்று இருப்பாரா என்பது சந்தேகம்தான். திருமணத்துக்கு பிறகு நடிக்காமல் இருந்த சரண்யா மோகனும் தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending News