நயன்தாரா 10 வருடங்களாக தமிழ் சினிமாவை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். ஆலமரம் போல் வளர்ந்து இன்று லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார். திரிஷா, கீர்த்தி சுரேஷ், காஜல் அகர்வால் என பல பேர் டப் கொடுத்தாலும் நயன்தாரா இடத்தை யாரும் பிடிக்க முடியவில்லை.
ஒண்டர் பார் நிறுவனத்தின் ஓனர் மற்றும் நடிகர் தனுஷ்ற்கும், நயன்தாராவிற்கும் பெரிய யுத்தமே நடந்து வருகிறது. எப்பொழுதுமே ஹீரோக்கள் விஷயத்தில் நட்பு பாராட்டி வரும் நயன்தாரா தனுஷ் இடம் மட்டுமே பல போராட்டங்களை நடத்தி வருகிறார். ஆனால் மற்ற நடிகர்களுடன் நட்பாய் பழகி வருகிறார். அப்படி அவர் விட்டுக் கொடுக்காத மூன்று நடிகர்கள்.
சிவகார்த்திகேயன்: நயன்தாரா மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் நெருங்கிய நண்பர்களாம். மிஸ்டர் லோக்கல், வேலைக்காரன் போன்ற படங்களில் இருவரும் சேர்ந்து நடித்தார்கள். இப்பொழுது கூட நயன்தாரா மூலம் தான் அனுபமா சோப்ரா, சிவகார்த்திகேயனை இன்டர்வியூ செய்துள்ளார்.
ஜெயம் ரவி: தனி ஒருவன், இறைவன் போன்ற படங்களில் இவர்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள். இன்று வரை இருவருக்கும் இடையே நல்ல ஒரு நெருங்கிய நட்பு இருந்து வருகிறது. மீண்டும் ஒரு ப்ராஜெக்ட் ஜெயம் ரவியுடன் கமிட்டாகி இருக்கிறார் நயன்தாரா.
ஆர்யா: சென்னையில் சூட்டிங் நடைபெறும் போதெல்லாம் ஆர்யாவின் “sea shell” ஹோட்டலில் இருந்து தான் நயன்தாராவுக்கு சாப்பாடு வருமாம். பாஸ் என்ற பாஸ்கரனில் ஆரம்பித்த இவர்களது நட்பு இன்றும் நிலைத்து நிற்கிறது.