செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

தீரன் படத்தில் கண் கூச வைத்த காட்சிகள்.. ஆக்சன் படங்களை எடுப்பதற்கு வினோத் சொன்ன கட்டுக்கதை

ஆக்சன் படங்களில் மட்டுமே வெற்றியைத் தேடிக் கொண்டிருக்கும் அஜித்தின் அஸ்தானை இயக்குனரான எச் வினோத் ரொமான்ஸ் படங்களை எடுக்க தயங்குகிறாரோ என்று சமீபத்தில் செய்தியாளர் அவரிடம் கேட்டதற்கு, வினோத் அவிழ்த்துவிட்ட கட்டுக்கதை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது.

பெரும்பாலும் அதிரடி படங்களை பற்றிய கதைகளை சுலபமாக எழுதக்கூடிய எச் வினோத் ரோமன்ஸ் குறிப்பு யோசிப்பதே கிடையாதாம். நிறைய முறை ரொமான்ஸ் மற்றும் காதலை மையமாக வைத்தே ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்று முயற்சி செய்த பார்த்திருக்கிறாராம்.

Also Read: 100 கோடி செலவு பண்ணாலும் நாங்க தான் கெத்து.. இத மட்டும் செய்யாதீங்க என கோரிக்கை வைத்த வினோத்

அது அவருக்கு வரவில்லை. ஏனென்றால் நிறைய பெண்களுடன் பேசியதில்லை. குடும்பத்திலும் அம்மா மற்றும் தங்கையுடன் மட்டுமே பேசுவாராம். மேலும் 15 வயதுக்கு மேல் அவர் படித்த காலேஜ் மற்றும் பணிபுரிந்த இடங்களிலும் ஆண்களுடனே அதிகம் பழகியதால் பெண்களுடனான அணுகுமுறை குறித்து தெரியவில்லை.

இதனால் பெண்களுடன் பழகக்கூடிய சான்ஸ் வினோத்துக்கு கிடைக்காமல் போனதாம். ஒரு பெண்ணுடன் பையன் எப்படி பேசுகிறான் என்பதை படிக்கிறதிலும் திரைப்படங்களில் பார்ப்பதிலும் மட்டுமே அனுபவம் பெற்றிருக்கும் வினோத், காதலுக்கும் ரொமான்ஸுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப் படங்களை எடுக்க இப்போது வரை தயங்குகிறாராம்.

Also Read: அஜித் சார் கிட்ட இருந்து எல்லாரும் இந்த 3 விஷயத்தை கத்துக்கணும்.. பூரிப்புடன் பகிர்ந்துகொண்ட ஹெச்.வினோத்

ஆகையால் இது அவருக்கு இருக்கும் பெரிய பிரச்சினையாகவே பார்க்கிறாராம். இருப்பினும் இதை சரி செய்துவிட்டு விரைவில் காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தை எடுக்க முயற்சி செய்து கொண்டிருப்பதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார்.

இவருடைய இந்த பேட்டியை கேட்ட ரசிகர்கள் பலரும் வினோத் இயக்கத்தில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கண் கூச வைக்கும் கார்த்தி மற்றும் ராகுல் ப்ரீத் சிங் ரொமான்ஸ் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அப்படி இருக்கும் போது முரட்டு சிங்கிள் என்ற நினைப்புடன் வினோத் சொல்லியிருக்கும் இந்தக் கட்டுக்கதையை நம்புவதற்கு நாங்க என்ன கிறுக்குப் பயல்களா என சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் கிழித்து தொங்க விடுகின்றனர்.

Also Read: விஜய், ரஜினி, கமலை பற்றி ஒரே வார்த்தையில் கூறி அசத்திய ஹெச்.வினோத்.. தில் ராஜ் இவர பார்த்து கத்துக்கோங்க

Trending News