செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

சுயநலமாக பக்கா பிளான் போட்ட தில் ராஜு.. அக்கட தேசத்தை பகைச்சிக்க முடியாது நண்பா

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தை தயாரித்துள்ள தில் ராஜு அடிக்கடி ஏதாவது சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். தெலுங்கில் மிகப்பெரிய தயாரிப்பாளராக இருக்கும் இவர் சுயநலமாக யோசித்து போட்ட பிளான் ஒன்று தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

அதாவது தமிழில் வரும் 11ம் தேதி வெளியாக இருக்கும் வாரிசு திரைப்படம் தெலுங்கில் இரு தினங்கள் கழித்து தான் வெளியாகிறது. அதாவது ஜனவரி 14ஆம் தேதி தான் இப்படம் அங்கு ரிலீஸ் ஆகிறது. ஏனென்றால் பொங்கல் தினத்தை முன்னிட்டு தெலுங்கில் முன்னணியில் இருக்கும் சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோர்களின் படங்கள் ஜனவரி 12, 13 தேதிகளில் வெளியாக இருக்கிறது.

Also read: வாரிசு பட கோவை சரளாவுக்கு இத்தனை கோடியா.. நயன்தாராவை ஓவர்டேக் செஞ்சிட்டாங்க போல

அதை கொண்டாடுவதற்காக ஆந்திர மக்கள் பெரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். அதனால் தான் வாரிசு படம் இரண்டு தினங்களுக்கு பிறகு வெளியாகிறது என்று தில்ராஜு கூறினார். இதன் மூலம் ஆந்திர மக்கள் தங்கள் ஹீரோக்களின் படங்களை கொண்டாடட்டும் என்று பெருந்தன்மையாக விட்டுக் கொடுப்பது போல் நடித்தார்.

ஆனால் உண்மையில் இதற்கு பின்னால் பெரும் காரணம் இருக்கிறது. அதாவது தெலுங்கில் மிகப்பெரிய ஆளுமையாக இருந்து வரும் தில்ராஜு நல்ல பிசினஸ் மேன் என்பதை காட்டும் பொருட்டு இப்போது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்திருக்கிறார். எப்படி என்றால் வாரிசு படத்தையும் அதே நாளில் வெளியிட்டால் அது தெலுங்கு மக்களை பகைத்துக் கொள்வது போல் ஆகும்.

Also read: வேகமெடுக்கும் பொங்கல் ரேஸ்.. வாரிசு, துணிவு ப்ரீ பிசினஸ் இன்றைய நிலவரம்

அதனாலேயே அவர் இப்படி ஒரு அறிக்கையை விட்டிருக்கிறார். இதில் மற்றொரு உள்குத்து என்னவென்றால் வாரிசு தெலுங்கு பதிப்பின் வேலை இன்னும் முழுமையாக முடியவில்லை. அதனாலேயே பட ரிலீஸ் தள்ளிப் போய் இருக்கிறது. இதுதான் உண்மை காரணம். ஆனால் தில் ராஜு அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் விட்டுக் கொடுப்பது போல் பேசி தெலுங்கு மக்களிடம் நல்ல பேரை வாங்கி விட்டார்.

இதுவே அவருடைய பிசினஸ் ராஜதந்திரம் எப்படி என்பதை காட்டுகிறது. அது மட்டுமல்லாமல் தமிழில் வாரிசு திரைப்படத்தின் மூலம் அடுத்தடுத்த பிளான் போட்டு வைத்துள்ள தில்ராஜு அதற்காக ரொம்பவும் மெனக்கெட்டு வருகிறாராம். வரும் புதன்கிழமை வெளியாக இருக்கும் இந்த திரைப்படம் அவர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

Also read: நெகட்டிவ் விமர்சனங்களுக்கு வேற லெவல் பதிலடி கொடுத்த அஜித்.. துணிவு பிரிவியூ ஷோ ட்விட்டர் விமர்சனம்

Trending News