வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சார்பட்டா பரம்பரை படம் நான் நடிக்க வேண்டிய படம்.. புலம்பிய நடிகர்

அட்டகத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான பா.ரஞ்சித். தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். காரணம் சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படம் மாபெரும் வெற்றி பெற்றதே. இப்படம் மூலம் மிகவும் பிரபலமான ரஞ்சித் புகழின் உச்சத்திற்கே சென்று உள்ளார்.

கடந்த ஜூலை மாதம் அமேசான் பிரைமில் வெளியான இப்படத்தில் ஆர்யாவும் அவருக்கு ஜோடியாக நடிகை துஷாரா விஜயனும் நடித்திருந்தனர். இவர்கள் தவிர கலையரசன், பசுபதி, ஜான், ஷபீர் கல்லரக்கல் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது.

இந்த நிலையில், ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி படம் மூலம் நடிகராக அறிமுகமான தினேஷ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் சார்பட்டா பரம்பரை படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.attakathi dinesh

அவர் கூறியதாவது, “அட்டகத்தி படத்திற்கு பிறகு நான்தான் சார்பட்டா படத்தில் நடிக்க வேண்டியது. மெட்ராஸ் படத்திற்கு முன்பே அதுக்குத்தான் நாங்க ரெடி ஆனோம். ஆனால் முடியவில்லை எனக்கும் பா.ரஞ்சித்திற்கும் இயற்கையாகவே அது அமையவில்லை. படம் வெளியான பிறகு நானே பன்னிருக்கலாமேன்னு தோணுச்சி. வருத்தம் எதுவும் இல்லை படம் வெளியானது மிகவும் எனக்கு சந்தோஷம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சார்ப்பாட்டா படத்தில் தினேஷ் நடித்திருந்தால் நிச்சயம் ஆர்யா அளவிற்கு படம் நன்றாக இருந்திருக்காது என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது. ஏனென்றால் இப்படத்திற்காக ஆர்யா தனது உடலமைப்பை முழுவதுமாக மாற்றி கிட்டத்தட்ட ஒரு குத்துச் சண்டை வீரராகவே மாறியுள்ளார். ஆனால் தினேஷ் இந்த அளவிற்கு இந்த கதாபாத்திரத்திற்கு பொருந்துவாரா என்பது சந்தேகமே என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Trending News