விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கும் பல நிகழ்ச்சிகள் டிஆர்பி யில் முதலிடத்தில் இருக்கும். அதற்கு முக்கியமான காரணம் டிடி அந்த நிகழ்ச்சியை அழகாக வழிநடத்தி எடுத்துச் செல்வது தான்.
டிடி வெள்ளித்திரையிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் பிரபல நடிகர், நடிகைகளுடன் நட்பு வைத்துள்ளார். டிடி எந்த உடை அணிந்திருந்தாலும் ஒரு பதுமை போல காட்சி அளிப்பார். ஏனென்றால் அவருடைய உடல் வாகுக்கு எந்த ஆடை அணிந்தாலும் அழகாக இருக்கும்.
விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சிகள் எல்லாமே டிடிக்கு தான் கொடுக்கப்படும். விஜய் டிவியின் விருது வழங்கும் நிகழ்ச்சியையும் டிடி தான் தொகுத்து வழங்குவார். அவ்வாறு விஜய் டிவியின் ஒரு அங்கமாகவே உள்ளார் டிடி. சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ள டிடிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள்.

ஒரு பாலிவுட் நடிகைக நிகரான ரசிகர்களை வைத்துள்ள டிவி தனது ரசிகர்களுக்கு சமூக வலைதளம் வாயிலாக அறிவுரையும் கூறி வருகிறார். அதிகமாக சுற்றுலா செல்லும் டிடி அவ்வப்போது மாடல் உடையில் இருக்கும் புகைப்படங்களை எடுத்து வெளியிட்ட வருவார்.

தற்போது டிடி தனது இன்ஸ்டாகிராமில் புடவை அணிந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மாடர்ன் டிரஸ்ஸில் விட இந்த மஞ்சள் நிற புடவையில் மார்க்கமாக இருக்கீங்க டிடி என அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.