வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சட்டை பட்டனை கழட்டி கூலிங் கிளாஸ் உடன் புகைப்படம் வெளியிட்ட டிடி.. ஹாலிவுட் ஹீரோயின் ஓரமா போங்க

காபி வித் டிடி மூலம் பிரபலமான திவ்யதர்ஷினி. அதன்பிறகு ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக கருதப்படும் திவ்யதர்ஷினிக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் தற்போது வரை ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

தனது கலகலப்பான பேச்சும் நக்கலான சிரிப்பும் தான் நிகழ்ச்சியை சுவாரசியமாக கொண்டு செல்வதற்கு உறுதுணையாக இருந்தது. ஆனால் சில வருடமாக திவ்யதர்ஷினி பெரிய அளவில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது இல்லை அதற்கு காரணம் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களும் திரைத்துறையில் ஏற்பட்ட ஒரு சில பிரச்சனைகள் தான் எனக் கூறுகின்றனர்.

ஆனால் விஜய் டிவியில் முக்கியமான பிரபலங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் திவ்யதர்ஷினி தான் தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் ஆர்ஆர்ஆர் பட புரமோஷனுக்காக ராஜமௌலி ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் வைத்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

divya dharshini
divya dharshini

சமீபகாலமாக திவ்யதர்ஷினி அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியூர் செல்லும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து ஒரு சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியபடுத்துகிறார்.

Trending News