தமிழ் திரையுலகில் முன்னணி நாயகனாக வலம் வரும் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இப்படத்தில் பிரபல நடிகை பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், யோகி பாபு, விடிவி கணேஷ், செல்வராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
ஒவ்வொரு நாளும் இப்படம் குறித்த புதிய அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களுக்கு மேலும் மேலும் இன்ப அதிர்ச்சி அளித்து வருகிறது. அந்த வகையில் பிரபல இயக்குனர் செல்வராகவன் மற்றும் சார்பட்டா பட புகழ் டான்சிங் ரோஸ் ஷபீர் ஆகியோர் அதிரடியாக பீஸ்ட் படத்தில் இணைந்தனர்.
இந்நிலையில் தற்போது பீஸ்ட் படத்தில் பிரபல நடிகர் தனுஷ் பாடல் ஒன்றை பாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த பாடலின் வரிகளையும் தனுஷே எழுத இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
முன்னதாக நடிகர் சிவகார்த்திகேயன் இப்படத்தில் விஜய்க்கு பாடல் எழுதி உள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனுஷ் பாடல் பாடுவது ரசிகர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதேசமயம் அவர் ஒரு சிறந்த பாடகர் என்பதும் மறுக்க முடியாத உண்மை. 3 படத்தில் இவர் பாடிய ஒய் திஸ் கொலவெறி பாடல் மாபெரும் வெற்றி பெற்றது. எனவே பீஸ்ட் படத்திலும் அதுபோன்ற பாடல் இடம் பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.