2004 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு அறிமுகமானார் மகேந்திரசிங் தோனி. இந்திய அணி ஒரு முழுநேர விக்கெட் கீப்பர் இல்லாமல் திணறிக் கொண்டிருந்த காலம் அது. தோனி வருகைக்கு முன் ராகுல் டிராவிட் ஒருநாள் போட்டிகளில் மட்டும் இந்திய அணிக்கு கீப்பராக செயல்பட்டுக்கொண்டிருந்தார்.
அதன்பின் சவுரவ் கங்குலி தலைமையில் இந்திய அணிக்கு முழு நேர கீப்பராக தோனி தேர்வு செய்யப்பட்டார். கங்குலிக்கு வயது ஆகியதால் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு தோனியிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் வருகைக்கு பின் இந்திய அணியில் நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் நேரத்திலேயே 4முக்கிய வீரர்கள் அணியில் இருந்து ஓரங்கட்டப் பட்டனர்.
இர்பான் பதான்: இந்திய அணியின் “சுல்தான் ஆப் ஸ்விங்” பந்துவீச்சில் மட்டுமல்ல பேட்டிங்கிலும் இவர் வல்லவர். 2007ஆம் ஆண்டு 20 ஓவர் உலகக்கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு முக்கியமான பங்கு வகித்தவர் இர்பான் பதான். அதன்பின் காயம் காரணமாக சென்றவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பவே இல்லை. இவர் அணியில் மீண்டும் இணைவதற்கு தோனி எந்த ஒரு முயற்சியும் செய்யவில்லை.
ராபின் உத்தப்பா: சௌரவ் கங்குலி தலைமையில் இவருக்கு நிறைய வாய்ப்புகள் அளிக்கப்பட்டது. ஆனால் தோனி கேப்டன் பொறுப்பை ஏற்ற பின் இவருக்கு ஒரு நாள் போட்டியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக அணியில் இருந்தும் இவர் கழற்றி விடப்பட்டார்.
அஜித் அகர்கர்: இந்திய அணிக்காக குறைந்த போட்டிகளில் நிறைய விக்கெட்டுகளை குவித்தவர் அகர்கர். இன்ஸ்விங், அவுட்ஸ்விங் என இருவித ஸ்விங் பவுலிங்கிலும் அசத்துவார். மகேந்திர சிங் தோனி இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற பின் அகர்கர் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.
யூசுப் பதான்: மிகப்பெரிய சிக்சர்களை அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இந்திய அணிக்குள் வந்தவர் யூசுப் பதான். 2007ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இவர் இடம் பெற்றிருந்தார். பின்னர் ஒருநாள் போட்டிகளில் தோனியின் வருகைக்கு பின் அணியில் இருந்து காணாமல் போய்விட்டார்.