வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

தோனியின் முன்னாள் காதலியை பார்த்ததுண்டா? கார் விபத்தில் இறந்த பெண் இவர்தான்

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் கேப்டனாக வலம் வந்தவர் மகேந்திர சிங் தோனி(dhoni). கடந்த வருடம் முழுவதுமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுக்கொண்டார். ஆனால் ஐபிஎல்லில் மட்டும் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

தோனியின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எம்எஸ் தோனி என்ற படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. கிட்டத்தட்ட 200 கோடி வசூல் செய்த அந்த படத்தில் நாயகனாக சுஷாந்த் சிங் ராஜ்புத் என்ற இளம் நடிகர் நடித்திருந்தார்.

ஆனால் அவர் கடந்த வருடம் தற்கொலை செய்து கொண்டார் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. எம்எஸ் தோனி திரைப்படத்தில் தோனியின் வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை தெளிவுபடுத்தினார்.

அதில் ஒன்றுதான் அவரது முன்னாள் காதலி விஷயம். எம்எஸ் தோனி படத்தில் காட்டப்பட்டது போலவே அவர் உண்மையில் கார் விபத்தில் தான் இறந்தார். ஆனால் அவருடைய புகைப்படத்தை யாருமே பார்த்ததில்லை. அவர் பெயர் ப்ரியங்கா.

அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தோனி தன்னுடைய காதலியுடன் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து தோனி ரசிகர்கள் கண் கலங்கி வருகின்றனர்.

dhoni-ex-girlfriend
dhoni-ex-girlfriend

அதன் பிறகு தோனி சாக்சியை திருமணம் செய்து கொண்டு சைவா என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தார். கடைசியாக நடந்து கொண்டிருந்த ஐபிஎல் போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்ட பிறகு மீண்டும் தோனி கிரிக்கெட்டில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Trending News