வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ரசிகர்களை தூங்க வைத்த தோனி.! ஒன்றுமே புரியாமல் குழம்பிப் போய் நின்ற இங்கிலாந்து வீரர்கள்!

மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்கு கிடைத்த ஒரு அற்புதம். விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக அணிக்குள் நுழைந்த தோனி இன்று உலகம் போற்றும் தலை சிறந்த கேப்டனாக பெயர் எடுத்துள்ளார்.

இந்திய அணிக்காக மூன்றுவித ஐசிசி கோப்பைகளையும் பெற்று தந்தவர் மகேந்திர சிங் தோனி. பல போட்டிகளில் தனது அதிரடி ஆட்டம் மூலம் இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்துள்ளார். அப்பேர்ப்பட்ட தோனி ஒரு நாள்போட்டியில் ரசிகர்கள் மட்டுமின்றி எதிரணி வீரர்களையும் தனது மெதுவான ஆட்டத்தின் மூலம் தூங்க வைத்துள்ளார்.

Dhoni-Cinemapettai-3.jpg
Dhoni-Cinemapettai-3.jpg

2018ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு அணிக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 326 ரன்களை இலக்காக விளையாடிய இந்திய அணி தோல்வியை தழுவியது. அந்த போட்டியில் இந்திய அணி முக்கியமான விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருக்கும் நேரத்தில் களமிறங்கிய தோனி டெஸ்ட் போட்டியை போன்று கட்டை போட்டு விளையாடினார்.

Dhoni-test-Cinemapettai.jpg
Dhoni-test-Cinemapettai.jpg

தோனி விளையாடிய விதத்தை பார்த்த இங்கிலாந்து வீரர்கள் திகைத்து போய் நின்றனர். அதுமட்டுமின்றி போட்டியை கண்டு கொண்டிருந்த ரசிகர்கள் மைதானத்திலேயே தூங்கி வழிந்தனர். இறுதியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இது ரசிகர்களை பெரிதும் வெறுப்படையச் செய்தது. போட்டிக்காக கட்டிய பணத்தை இழந்து விட்டோம் என ரசிகர்கள் வெளியேறினர். தோனியின் இன்னிங்சில் இது ஒரு மோசமான தருணமாக மாறியது.

Dhoni1-Cinemapettai.jpg
Dhoni1-Cinemapettai.jpg

Trending News