திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

யோகி பாபுவை செமையாய் கலாய்த்த தோனி.. இசை வெளியீட்டு விழாவில் நடந்த சம்பவம்

Comedian Yogibabu: நகைச்சுவை நடிகர்கள் தமிழ் சினிமாவில் குறைவாக இருக்கும் நிலையில், தற்பொழுது தன் காட்டில் மழை பெய்வது போல அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார் யோகி பாபு. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது இவரை கலாய்த்த பிரபலம் குறித்த தகவலை இங்கு காண்போம்.

தன் நகைச்சுவை உணர்வால், கிடைக்கும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டு சிறந்த சப்போட்டிங் ஆக்டராகவும், நகைச்சுவை நடிகராகவும் அசத்தி வருகிறார் யோகி பாபு. இவரின் கால்ஷீட்டில் எண்ணற்ற படங்கள் இருக்கும் நிலையில், தோனி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பின் கீழ் உருவாகும் படம் தான் லேட் கெட் மேரிட்.

Also Read: தூக்கிவிட்டதற்கே துரோகம் செய்த சிவகார்த்திகேயன்.. எந்த காலத்திலும் அவர் கூட கூட்டணி போட மாட்டேன்

இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவனா, நதியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தோனி மற்றும் சாக்ஷி இருவரும் ஸ்டைலாக வந்து அரங்கத்தையே அதிர வைத்தனர்.

அதிலும் குறிப்பாக கருப்பு நிற கோட் சூட்டில் ஹாலிவுட் நட்சத்திரம் போலவே தோனி வந்திருந்தார். இப்படம் கிரிக்கெட் சம்பந்தமான படம் என்பதால் ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது. அதுவும் சில ஆண்டு இடைவெளிக்கு பிறகு ஹரிஷ் கல்யாண் ஏற்கும் படம் என்பதால் கூடுதல் ஆவலில் இருந்து வருகின்றனர்.

Also Read: செல்லா காசாக நிற்கும் குணசேகரன்.. கௌதமிடம் மொத்த பொறுப்பையும் ஒப்படைத்த ஜீவானந்தம்

இந்த இசை வெளியீட்டு விழாவை தொகுத்து நடத்தியவர் விஜே பாவனா. அப்பொழுது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அம்பத்தி ராயுடு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற போவதாக கூறிய அவர் அந்த இடத்திற்கு யோகி பாபுவை பரிந்துரைத்திருக்கிறார்.

இதைக் கேட்ட தோனி, எனக்கு ஒன்றும் இல்லை, யோகி பாபுவை ஒழுங்காக பிராட்டிக்ஸ் வர சொல்லுங்கள். மேலும் மேட்சுக்கு கால்ஷீட் கொடுத்தால் அவரை அணிக்குள் சேர்ப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை எனவும் கூறி யோகி பாபுவை செமையாய் கலாய்த்து விட்டார்.

Also Read: திடீரென தற்கொலை செய்து கொண்ட வடிவேலுவின் ஜோடி.. உண்மையான காரணம் இதுதான்

- Advertisement -

Trending News