வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பத்து ஆண்டுகளுக்குப் பின் மனம் திறந்த வீரேந்திர சேவாக்.. அந்த சம்பவத்திற்கு காரணம் தோனி இல்லை!

என்றுமே எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு அச்சமூட்டும் வகையில் அதிரடி ஆட்டம் ஆடக்கூடிய வீரர் சேவாக். பேட்டிங்கில் மட்டுமின்றி சுழற்பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்படுவார். பல முக்கியமான போட்டிகளில் இந்திய அணிக்காக திறம்பட செயல்பட்டு வெற்றியடையச் செய்துள்ளார்.

2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்றது. அதில் சேவாக்கின் பங்களிப்பு முக்கியமான ஒன்று. அதன் பின் இந்திய அணியில் இருந்து சீனியர் வீரர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.

மேலும் சீனியர் வீரர்கள் விளையாடுவதற்கு தகுந்த உடல் தகுதி இல்லை என்றும், அவர்கள் ஆட்டத்தின் போக்கை மாற்றுகிறார்கள் என்றும் குற்றம்சாட்டப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் தோனி தான் என்று பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் பத்து வருடங்கள் கழித்து அதற்கு சேவாக் பதில் அளித்துள்ளார். தோனி தன்னை அணியில் இருந்து வெளியேற்றிருக்க மாட்டார் எனவும். தோனி மிகச்சிறந்த வீரர் மட்டுமின்றி நல்ல மனிதர்.

அவர் எப்பொழுதும் அணியில் இருக்கும் சீனியர் வீரர்களுக்கு மரியாதையை கொடுக்கும் நபர் என்று பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதனால் தான் மகேந்திர சிங் தோனி இன்று வரை உலகம் போற்றும் மிகச்சிறந்த கேப்டனாக இருக்கிறார் எனவும் கூறியுள்ளார்.

Dhoni-Shewag-cinemapettai.jpg
Dhoni-Shewag-cinemapettai.jpg

விரேந்திர சேவாக்கின் இத்தகைய பதில் தோனி ரசிகர்களை மட்டுமின்றி, சேவாக்கின் ரசிகர்களையும் மகிழ்ச்சி அடையச்செய்துள்ளது.

Trending News