புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பல லட்சம் மதிப்பில் தோனி வழங்கிய பரிசு.. உச்சகட்ட சந்தோஷத்தில் யோகி பாபு

யோகி பாபு தற்பொழுது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். பெரும்பாலான படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் ஒரு கிரிக்கெட் பிரியரும் கூட ஆவார். இந்நிலையில் கிரிக்கெட்டில் ஜாம்பவானாக இருக்கக்கூடிய பிரபலம் ஒருவர் தற்பொழுது யோகி பாபுவிற்கு பல லட்சம் மதிப்பிலான பரிசு ஒன்றினை கொடுத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

துணை நடிகராக அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே தனது நடிப்பின் மூலம் அபரிவிதமான வளர்ச்சி அடைந்து, நகைச்சுவை நடிகர்களுக்கு போட்டியாக பல படங்களில் காமெடி ரோலில் நடிக்க தொடங்கியவர் தான் யோகி பாபு. மேலும் இவர் டாப் ஹீரோக்களின் படங்களில் காமெடி நட்சத்திரமாக தனது பங்களிப்பை மிகச் சிறந்த முறையில் அளித்துள்ளார். தொடர்ந்து அசால்டாக அடிக்கும் கவுண்டர்களின் மூலம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளார்.

Also Read: சந்தானத்தை பழிவாங்க நினைக்கும் பிரபலங்கள்.. கட்டி அரவணைத்துக் கொண்ட யோகி பாபு

மேலும் காமெடி கதாபாத்திரத்தினையும் தாண்டி கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவிற்கு இணையாக தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பார். தற்பொழுது படங்களில் பிஸியாக நடித்து வரும் யோகி பாபு நேரம் கிடைக்கும் போதெல்லாம் கிரிக்கெட் விளையாடுவார். இந்நிலையில் தான் கிரிக்கெட்டில் ஜாம்பவானாக இருக்கக்கூடிய எம் எஸ் தோனி அவர்கள் யோகி பாபுவிற்கு தான்  கையெழுத்திட்ட பேட் ஒன்றினை பரிசாக வழங்கியுள்ளார்.

தற்பொழுது யோகி பாபு எம்.எஸ்.தோனியின் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் எல் ஜி எம் என்ற படத்தில் காமெடி ரோலில் நடிக்க உள்ளார். அறிமுக இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் இவானா ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். மேலும் இப்படமானது குடும்பப் பொழுதுபோக்கு படமாக உருவாகி வருகிறது. 

Also Read: நக்கல் நடிகருடன் பட வாய்ப்பை தட்டி பறித்த யோகி பாபு.. சூரி மார்க்கெட்டை இழக்க இது தான் காரணம்

இதனைத் தொடர்ந்து ஏகப்பட்ட படங்களில் காமெடி கேரக்டரில் நடித்து வந்த யோகி பாபு 2021 ஆம் ஆண்டு வெளியான மண்டலோ படத்தில் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதிலும் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் முடி திருத்தும் தொழிலாளியாக கனகச்சிதமாக தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் தான் பொம்மை நாயகி. இதில் தனது மகளுக்காக நீதி கேட்டு போராடும் தந்தையாக நடித்துள்ளார். இந்நிலையில் கிரிக்கெட்டில் ஜாம்பவானாக திகழ்ந்த எம் எஸ் தோனி இடம் இருந்து கிரிக்கெட் பேட்டை பரிசாக பெற்றுள்ளார். இதற்காக யோகி பாபு மிக்க மகிழ்ச்சி என்று தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

Also Read: கதையே கேட்காமல் கழுத்தில் துண்டை போடும் யோகி பாபு.. கேரியருக்கு வரும் பேராபத்து

Trending News