வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

துருவ் விக்ரமை இயக்கும் கர்ணன் இயக்குனர்.. அப்டேட் வெளியிட்ட படக்குழு

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்ய வர்மா படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் துருவ் விக்ரம். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரமின் மகன் ஆவார்.

தற்போது துருவ் விக்ரம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் சியான் 60 படத்தில், தனது தந்தையுடன் இணைந்து நடித்து வருகிறார். இப்படத்தில் வாணி போஜன், பாபி சிம்ஹா, சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிவடைந்துள்ளது.

இதனை தொடர்ந்து கர்ணன் பட இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்ததாக இயக்கும் படத்தில் துருவ் விக்ரம் நாயகனாக நடிக்க உள்ளார். இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிக்கும் இப்படம் கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவாக உள்ளது. இந்நிலையில், மாரி செல்வராஜ் – துருவ் விக்ரம் இணையும் படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

dhruv-vikram-mari-selvaraj-01
dhruv-vikram-mari-selvaraj-01

முன்னதாக மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய இரு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாராட்டையும் பெற்று இருந்தது. எனவே துருவ் விக்ரம் – மாரி செல்வராஜ் இணையும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Trending News