புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

அப்பா உழைப்பில் 10% கூட போடாத துருவ் விக்ரம்.. கழுதை கட்டெறும்பான கதை தான், வீழ்ச்சியில் மார்க்கெட்

விக்ரம் சினிமாவில் அஜித், விஜய் போன்ற இடத்தை பிடிக்கவில்லை என்றாலும் தனக்கான தனித்துவமான இடத்தை பிடித்துள்ளார். அதுவும் சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் அவருடைய கடின உழைப்பால் மட்டுமே இந்த நிலையை அடைந்துள்ளார். இந்நிலையில் அவரது வாரிசு துருவ் விக்ரமும் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கில் வெளியான ஆதித்ய வர்மா படத்தில் துருவ் விக்ரம் நடித்திருந்தார். இந்நிலையில் முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். ஆனால் அதன் பிறகு அவரது நடிப்பில் வெளியான மகான் படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை.

Also Read : திடீரென நிறுத்தப்பட்ட தங்கலான் படப்பிடிப்பு.. என்னதான் ஆச்சு மருத்துவமனையில் விக்ரம்

தனது அப்பா போல் சினிமாவில் மிகப்பெரிய உயரத்திற்கு செல்வார் என எதிர்பார்த்த நிலையில் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக நாளுக்கு நாள் அவரது மார்க்கெட் வீழ்ச்சி அடைந்து வருகிறது. எப்படியாவது மகனை சினிமாவில் முன்னணி ஹீரோவாக ஆக்கிவிட வேண்டும் என விக்ரம் இயக்குனர் மாரி செல்வராஜ் இடம் தனது மகனை ஒப்படைத்தார்.

அந்தப் படமும் இப்போது வரை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது. தனுஷை வைத்து மாரி செல்வராஜ் படம் இயக்க உள்ளதால் துருவ் விக்ரம் படம் எப்போது தொடங்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் துருவ் விக்ரம் பூமதியே என்ற மியூசிக் வீடியோவில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் இந்த பாடல் உருவாகியுள்ளது.

Also Read : வில்லனுக்கே பிளாஸ்பேக் வைத்து ஹிட் கொடுத்த 5 கேரக்டர்கள்.. கேங்ஸ்டர் ஆக உலா வந்த விக்ரம் வேதா

துருவ் விக்ரம் இந்த பாடலை பாடி, இயக்கி, நடித்துள்ளார் என்பது சிறப்பம்சம். மேலும் பாடல் ஆசிரியர் விவேக் பூமதியே பாடல் வரிகளை எழுதி உள்ளார். இந்தப் பாடலுக்கு விஜய் வர்மா நடன இயக்குனராக பணியாற்று இருந்தார். ஆனால் இந்த பாடல் ரசிகர்களை கவரவில்லை.

இந்தப் பாடல் மூலமாவது சினிமாவில் நல்ல வாய்ப்பை பெறலாம் என்று நினைத்து துருவ் விக்ரமுக்கு இது பெரிய அடியாக விழுந்துள்ளது. விக்ரம் சினிமாவுக்காக பல விஷயங்களை மெனக்கெட்டு செய்யும் நிலையில் அதில் 10 சதவீதம் கூட துருவ் விக்ரம் உழைப்பு போடவில்லை. மேலும் மாரி செல்வராஜ் ஆவது இவருக்கு கை கொடுத்து சினிமாவில் தூக்கி விடுகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read : சிக்ஸ் பேக் உடன் விக்ரமுக்கு தண்ணி காட்ட போகும் தங்கலான் பட ஹீரோயின்.. ட்ரெண்டாகும் ஃபோட்டோ

Trending News