திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தங்கலான் போல உருமாறிய துருவ் விக்ரம்.. மாரி செல்வராஜால் ஏற்பட்ட மாற்றம், தீயாய் பரவும் புகைப்படம்

Dhruv Vikram: சுயம்பு போல் தானாக வளர்ந்து நிற்பவர் தான் விக்ரம். எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் கடின உழைப்பின் காரணமாக இன்று முக்கிய நடிகர்களுள் ஒருவராக இருக்கிறார். ஆனாலும் விக்ரமின் மகன் மிகப்பெரிய அடையாளத்துடன் தான் சினிமாவில் நுழைந்தார். முதல் படம் அவருக்கு ஓரளவு கை கொடுத்தாலும் அடுத்தடுத்த படங்கள் தொடர் தோல்வியை தழுவியது.

இதனால் மாரி செல்வராஜிடம் தனது மகனை ஒப்படைத்தார் விக்ரம். அதன்படி சில மாதங்களாகவே துருவ் விக்ரம் பயிற்சி எடுத்து வந்தார். அதாவது அந்த படம் 90 காலகட்டத்தில் உள்ள கபடி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட இருக்கிறது. இதில் கபடி வீரர் மானாதி கணேசனின் நிஜ வாழ்க்கையை தழுவி எடுக்க உள்ளனர்.

Also Read : வாணி போஜன் போல் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஏற்பட்ட அவமானம்.. விக்ரம் படத்தால் அடுத்தடுத்து விழும் பெரிய அடி

இதற்காக கடுமையான பயிற்சி மேற்கொண்டு விக்ரமின் தங்கலான் போல் தன்னை மாற்றி இருக்கிறார் துருவ் விக்ரம். விக்ரம் தன்னுடைய படத்திற்காக எந்த எல்லைக்கும் செல்வார் என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால் அவருடைய மகன் சொகுசாகவே வாழ்ந்த நிலையில் இப்போது சினிமாவில் இறங்கிய பிறகு அப்பாவுக்கு போட்டியாக துருவ் விக்ரம் வந்துள்ளார்.

அதாவது மாரி செல்வராஜ் படத்திற்காக தனது உடம்பை சரமாரியாக துருவ் விக்ரம் குறைத்து இருக்கிறார். இதுவரை சாக்லேட் பாயாக திரிந்த இவர் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதற்காக தனது முதல் படியை எடுத்து வைத்திருக்கிறார்.

Also Read : உச்சம் தொட்டாலும் அலட்டலும், ஆணவமும் இல்லாத 5 நடிகர்கள்.. எதையும் கொண்டாடாத விக்ரம்

ஆகையால் ரசிகர்கள் பலரும் துருவ் விக்ரமுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள். மேலும் மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் இணையும் படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் தூத்துக்குடியில் தொடங்க இருக்கிறது. இப்படத்தை இயக்குனர் பா ரஞ்சித் தயாரிக்கிறார்.

மாரி செல்வராஜின் முந்தைய படமான மாமன்னன் படம் கடுமையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல லாபத்தை பெற்று தந்தது. ஆகையால் துருவ் விக்ரம் மற்றும் மாரி செல்வராஜ் இணையும் படத்தின் மீதான எதிர்பார்க்கும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது.

தங்கலான் போல உருமாறிய துருவ் விக்ரம்

dhru-vikram-1
dhru-vikram-1

Also Read : எதிர்பார்த்த படத்தில் இப்படி ஒரு கேவலமான விஷயம்.. கௌதம் வாசுதேவ் மேனன், விக்ரம் கண்டுக்காத அவல நிலை

Trending News