துருவ நட்சத்திரத்தை எப்படி ரிலீஸ் பண்றேன்னு நான் பார்க்கிறேன்.? கோர்ட்டை தாண்டி குடைச்சல் கொடுக்கும் வாரிசு நடிகர்

Dhruva Nakshatram Movie: தமிழ் சினிமாவிற்கு முக்கியமான காதல் படங்களை கொடுத்த ரொமான்டிக் இயக்குனர் தான் கௌதம் வாசுதேவ் மேனன். இவருக்கு இப்போது நேரமே சரியில்லை, சுமார் நான்கு வருடங்களாக விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிய துருவ  நட்சத்திரம் படத்தை எப்படியாவது ரிலீஸ் செய்து விடலாம் என பார்க்கிறார்.

பல போராட்டங்களுக்கு மத்தியில் நேற்று இந்த படத்தை ரிலீஸ் செய்யப் போவதாக முன்பே அறிவிக்கப்பட்டது. ஆனால் சிம்பு நடிப்பில் சூப்பர் ஸ்டார் என்ற படத்தை இயக்க ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் பெற்ற ரூபாய் 2.40 கோடியை கடந்த திங்கள் முதல் புதன் கிழமைக்குள் தந்தால் மட்டுமே துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்று ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டது.

ஆனால் அந்த பணத்தை கௌதம் மேனனால் கொடுக்க முடியாததால் நேற்று படம் ரிலீஸ் ஆகல. ஆனா விரைவில் பணத்தை ஏற்பாடு செய்துவிட்டு படத்தை ரிலீஸ் செய்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் கௌதம் மேனன் இருந்தார். இப்போது ஐகோர்ட்டை தாண்டி பிரபல வாரிசு நடிகர் துருவ நட்சத்திரம் படத்தை எப்படி ரிலீஸ் பண்றேன்னு பார்க்கிறேன் என்று பயங்கரமா குடைச்சல் கொடுக்கிறார்.

Also read: அஜித், விக்ரம் தூக்கி எறிந்த 5 படங்கள்.. வம்படியாய் ஐந்தையும் வாங்கி ஜெயித்த ரோலக்ஸ்

கௌதம் மேனனை உருட்டி எடுக்கும் வாரிசு நடிகர்

ஆல் இன் ஃபிலிம்ஸ் ஃபினான்சியரை கௌதம் மேனன் சந்தித்து பேசினார். அந்த மீட்டிங் நடக்கும் போது திடீரென்று சிம்பு வந்துவிட்டார். அவர் அங்க வந்து, ‘கௌதம் மேனன் எனக்கும் பணம் தரணும், அதை கொடுக்க சொல்லுங்க, இல்லேன்னா படம் வெளிய வராது’ என்று மிரட்டி விட்டார்.

சிம்புவுக்கு கௌதம் மேனன் மேல் எதற்கு இவ்வளவு கோபம் என்று தெரியவில்லை. இது விக்ரம் நடிச்ச படம், அதனால் தான் இப்படி செய்கிறார். விக்ரமுக்கும் சிம்புவுக்கு ஏற்கனவே ஆகாது, அதனால் தான் இப்போது துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

கௌதமேனன் எப்படியாவது பணத்தை சமாளித்து பினான்சியரை சரி கட்டி விட்டு, படத்தை ரிலீஸ் செய்து விடலாம் என்று பணத்திற்கான ஏற்பாடுகளை செய்கிறார். ஆனால் இப்போது திடீரென்று சிம்புவும் குடைச்சல் கொடுப்பது அவருக்கு பெரிய தலைவலி ஆகிவிட்டது.

Also read: விக்ரமை நம்பியதால் நாலு வருஷம் நாசமா போச்சு.. தூக்கிவிட்ட ஏணியவே பதம் பார்த்த சியான்