வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

3 வருடமாக கிடப்பில் கிடந்த விக்ரமின் படம்.. எப்போது ரிலீஸ் தெரியுமா.?

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி, பல ஆண்டுகளாக வெளிவராமல் கிடப்பில் இருந்த துருவ நட்சத்திரம் படம் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரித்து வர்மா, சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன் மற்றும் பலர் நடித்துள்ள, துருவ படத்தின் படப்பிடிப்பு 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இருப்பினும் பல காரணங்களால் இந்தப் படம் தாமதமாகி வருகிறது. மேலும், 2017ஆம் ஆண்டு இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.

படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி நீண்ட நாட்கள் ஆகியும் படம் வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் படம் எப்போது வெளிவரும் என கேள்விகள் எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் போஸ்டர் புரொடக்ஷன்ஸ் பணிகள் இன்னும் 10 நாட்கள் மீதம் இருப்பதாகவும், திட்டமிட்டபடி படத்தை முடித்து இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடுவோம் எனவும் படத்தின் இயக்குனர் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.

இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். நீண்ட நாட்களுக்கு பின்னர் படம் வெளியாவதால் படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

dhruva-natchathiram-cinemapettai
dhruva-natchathiram-cinemapettai

Trending News