ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

பல கோடி செட்டில்மெண்ட், அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்.. துருவ நட்சத்திரத்திற்கு வச்ச ஆப்பு

Dhruva Natchathiram: கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் பல வருடங்களுக்கு முன்பே உருவான துருவ நட்சத்திரம் இப்போது தான் ரிலீஸுக்கு தயாராகி இருக்கிறது. பல்வேறு பிரச்சினைகளால் முடங்கிக் கிடந்த இப்படத்தை மீண்டும் தூசி தட்டிய கெளதம் மேனன் ட்ரைலர், பாடல்கள் ஆகியவை மூலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தார்.

மேலும் படம் நாளை வெளியாவதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வந்திருந்தது. ஆனால் இப்போது இந்த படம் வெளியாகுமா என்ற சந்தேகம் உருவாகி இருக்கிறது. அதாவது கௌதம் மேனன் ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு சிம்புவை வைத்து படம் பண்ணி தருவதாக 2.40 கோடி பணம் பெற்றிருக்கிறார்.

ஆனால் சொன்னபடி படத்தை முடிக்காத நிலையில் தற்போது பணத்தை கொடுக்காமல் படத்தை வெளியிடக் கூடாது என்று அந்த நிறுவனம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளது. இதை விசாரித்த நீதிபதி நாளை காலை 10 மணிக்குள் மொத்த பணத்தையும் திருப்பி கொடுத்து விட வேண்டும்.

Also read: துருவ நட்சத்திரம் படத்திற்கு கௌதம் மேனனின் சாய்ஸ்.. விக்ரமுக்கு முன்பு லிஸ்டில் இருந்த 2 ஹீரோக்கள்

அப்படி இல்லை என்றால் துருவ நட்சத்திரம் படம் வெளியாக கூடாது என அதிரடி உத்தரவு போட்டிருக்கிறார். இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் நேற்று வரை படத்தின் ப்ரமோஷன்கள் களை கட்டி வந்த நிலையில் இன்று காலையிலிருந்தே அதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்தது.

இதுவே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில் உயர்நீதி மன்றத்தின் அதிரடி உத்தரவும் ரசிகர்களை கலங்க வைத்துள்ளது. எப்படியோ தட்டு தடுமாறி ரிலீசுக்கு தயாரான துருவ நட்சத்திரம் கடைசி நேரத்தில் இப்படி ஒரு சிக்கலில் சிக்கி இருப்பது பட குழுவினரையும் உலுக்கி இருக்கிறது.

Also read: தட்டு தடுமாறி ரிலீசுக்கு தயாரான துருவ நட்சத்திரம்.. முதல் விமர்சனத்தை கொடுத்து மிரட்டிய பிரபலம்

Trending News