ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

4 வருடம் கழித்து துருவ நட்சத்திரம் படத்திலிருந்து வந்த அப்டேட்.. கையெடுத்து கும்பிட்ட சீயான் ரசிகர்கள்

கௌதம் மேனன் படத்தில் வாய்ப்பு என்றாலே கோலிவுட் வட்டாரங்களில் உள்ள அனைத்து நடிகர்களும் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓட்டம் பிடிக்கிறார்கள். அதற்கு காரணம் அவருடைய படங்கள் எதுவுமே குறித்த நேரத்தில் வெளிவராதது தான்.

அப்படி கவுதம் மேனன் இயக்கத்தில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி தற்போதுவரை கிளைமாக்ஸ் காட்சி மட்டும் படமாக்கப்படாமல் தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் துருவ நட்சத்திரம்.

ரஜினி, சூர்யா ஆகிய இருவரும் நிராகரித்த துருவ நட்சத்திரம் கதையை சீயான் விக்ரமை வைத்து முக்கால்வாசி படமாக்கி விட்டார் கௌதம் மேனன். ஆனால் துருவ நட்சத்திரம் படமெடுக்கும்போது அவரிடம் முழு ஸ்கிரிப்ட் இல்லை என்பதுதான் பெரிய பிரச்சனையே.

தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி குணச்சித்திர நடிகர்களும் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வந்தனர். ஆனால் கௌதம் மேனன் திரைக்கதையை சரியாக அமையாமல் சொதப்பியதால் அனைவரும் வேறு வேறு படங்களில் பிசியாகி விட்டனர்.

dhruva natchathiram-cinemapettai-01
dhruva natchathiram-cinemapettai-01

தற்போது மொத்தம் ரெடி செய்து கவுதம் மேனன் அழைத்த போது மற்ற அனைவருக்கும் கால்ஷீட் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு வழியாக துருவ நட்சத்திரம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.

துருவ நட்சத்திரம் படம் சார்பாக கௌதம் மேனன் மற்றும் விக்ரம் ஆகிய இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது தற்போது சுமூகமாக முடிந்து விட்டதாம். இந்நிலையில் இந்த வருடத்திற்குள் உயிரே போனாலும் துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்து விடுவேன் என சத்தியம் செய்துள்ளாராம் கௌதம் மேனன்.

Trending News