பொதுவாகவே முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் நடிகைகளுக்கு ஒரு தனி மவுஸ் இருக்கும். அதிலும் விஜய் படத்தின் நடிகை என்றாலே ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு அவர்களுடைய புகழ் எல்லா பக்கமும் பரவும். அதற்கு காரணம் விஜய் படத்தில் முக்கியமாக இருக்கும் ரொமான்ஸ் மற்றும் டான்ஸ். இது இரண்டையும் வைத்துக்கொண்டு அந்த ஹீரோயின்கள் பெரிய அளவில் ரீச்சாகி விடுவார்கள்.
அதனாலையே எல்லா ஹீரோயின்களும் அவருடைய படத்தில் நடித்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டு வருவார்கள். அப்படித்தான் விஜய்யுடன் ஜோடி சேர்ந்த ஒரு நடிகை தமிழ் ரசிகர்களை மிகவும் கவர்ந்தார். அந்த நடிகை வேறு யாருமில்லை உலக அழகி பிரியங்கா சோப்ரா தான். இவர் தமிழில் விஜய் உடன் தமிழன் படத்தில் ஜோடியாக நடித்தார்.
Also read: லியோ படத்தில் விஜய்யுடன் நடித்த பிக்பாஸ் போட்டியாளர்.. ட்வீட் மூலம் உறுதி செய்த நடிகை
அந்த படத்தை பார்க்கும் பொழுது இவர் என்ன நடிக்கவே தெரியாமல் இப்படி நடிப்பை சொதப்புகிறார் என்ற சொல்லும் அளவுக்கு தான் அவருடைய நடிப்பு இருக்கும். ஆனாலும் இவர் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். தற்போது இவர் அணிந்து வந்த ஒரு நெக்லஸ் ரசிகர்களை மிகவும் ஆச்சரியப்படுத்தி வருகிறது.
அதாவது நேற்று அமெரிக்கா நியூயார்க் நகரில் நடந்த ” மெட் காலா 2023” பேஷன் நிகழ்ச்சியில் பிரியங்கா சோப்ரா மற்றும் அவருடைய கணவர் நிக் ஜோன்ஸ் கலந்து கொண்டார்கள். இதை பார்த்த பலரும் வாயடைத்துப் போகும் அளவிற்கு இவர்களுடைய தோற்றம் பிரதிபலித்து இருக்கிறது.
Also read: விஜய்யுடன் கர்ஜிக்க மட்டும் 15 கோடியா.? தலை சுற்ற வைக்கும் லோகேஷின் மாஸ்டர் பிளான்
அதில் பிரியங்கா சோப்ரா பிளாக் கவுன் டிரஸ் போட்டு கண்ணே பறிக்கும் அளவுக்கு கழுத்தில் வைர நெக்லஸ் ஒன்றை அணிந்து வந்திருக்கிறார். இந்த நெக்லேஷின் மொத்த மதிப்பு அமெரிக்க டாலருக்கு 30 மில்லியன் வரை ஆகும் என்கிறார்கள். அதாவது இந்திய மதிப்பு படி 200 கோடி வரை விலை மதிப்பு மிகுந்தது என்று கூறப்படுகிறது. இதை கேட்கும் போது நம்ம தளபதி சம்பளத்தை விட இது இரண்டு மடங்காக இருக்கிறது.
இவர் இந்த ஒரு நிகழ்ச்சிக்காக மட்டுமே இந்த மாதிரியான நெக்லஸ் அணிந்து கொண்டு வருவாராம். அதன் பின் ஒரு நேரம் உபயோகித்த பிறகு அந்த நெக்லஸை பிரியங்கா சோப்ரா என்ற பெயரை சொல்லி ஏலம் விட்டு விடுவார்கள். இதையும் வாங்குவதற்கு வரிசையில் போட்டி போட்டுக் கொண்டு காத்துக் கொண்டிருப்பார்கள்.
பிரியங்கா சோப்ராவின் வைரல் புகைப்படம்

Also read: முகம் சுளிக்க வைக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா.. வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்