ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

சம்பளத்திற்காக அஜித் இப்படி செய்தாரா.? அதிர்ச்சியை கிளப்பிய சம்பவம்

Ajith: அஜித் உடன் நெருங்கி பழகியவர்களிடம் கேட்டால் தெரியும் அவர் எப்படிப்பட்ட குணாதிசயம் கொண்டவர் என்பது. அதாவது அஜித்தை பொறுத்தவரையில் தன்னிடம் பணியாற்றிய இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் ஆகியோருக்கு நஷ்டம் ஏற்படக்கூடாது என அடுத்தடுத்த வாய்ப்புகளை தொடர்ந்து கொடுக்கக்கூடியவர்.

இப்படிப்பட்ட அஜித் சம்பளத்திற்காக ஒரு விஷயத்தை செய்துள்ளார் என்று அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டிருக்கிறது. இப்போது ஹீரோக்களின் சம்பளத்தை கேட்டால் தலையை சுற்ற வைக்கிறது. அஜித் போனி கபூர் உடன் தொடர்ந்து மூன்று படங்களில் நடித்து வந்தார். அப்போது அவருடைய சம்பளம் குறைவுதான்.

கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் அவருடைய சம்பளம் 65 கோடி. அடுத்ததாக லைக்கா உடன் கூட்டணி போட்டு விடாமுயற்சி படத்தில் ஒப்பந்தமானார். ஆனால் இதற்கு முன்னதாக விடாமுயற்சி படம் பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்திய ஜோதி நிறுவனத்திடம் தான் சென்றிருக்கிறதாம்.

Also Read : அரைகுறை கதையை நம்பி இறங்காத அஜித்.. பாதியிலேயே தூக்கி எறியப்பட்ட 5 இயக்குனர்கள்

விக்னேஷ் சிவன், அஜித், சத்யஜோதி பிலிம்ஸ் கூட்டணியில் ஏகே 62 படம் உருவாக இருந்திருக்கிறது. துணிவு படத்தில் 65 கோடி சம்பளம் வாங்கியதால் அடுத்த படத்திற்கு 70 கோடி கொடுக்கலாம் என்ற முடிவுக்கு சத்யஜோதி நிறுவனம் வந்துள்ளது. ஆனால் அப்போது ரஜினி, விஜய் போன்ற நடிகர்களின் சம்பளம் 100 கோடியை தாண்டி அதிகமாக இருந்தது.

இதனால் அஜித் ஏகே 62 படத்திற்கு 100 கோடி சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த அளவுக்கு தயாரிப்பு நிறுவனத்தால் கொடுக்க இயலவில்லை. அதன் பிறகு தான் விக்னேஷ் சிவன், நயன்தாரா மற்றும் அஜித் ஆகியோர் இது குறித்து ஆலோசித்தபோது லைக்காவிடம் படம் சென்று இருக்கிறது. அதன் பிறகு விக்னேஷ் சிவனையும் லைக்கா தூக்கி விட்டது.

மேலும் மகிழ்த்திருமேனி இப்போது விடாமுயற்சி படத்தை இயக்கி வருகிறார். இல்லையென்றால் சத்யஜோதி நிறுவனத்தில் தான் படம் பண்ணி இருப்பாராம். ஆனால் இந்த செய்தி பலருக்கும் ஆச்சரியம் அளிக்கும் விதமாகத்தான் இருக்கிறது. அஜித் எப்போதுமே தயாரிப்பாளர்கள் நிலை அறிந்து நடக்கக் கூடியவர் என்பதால் இந்த செய்தி பொய்யானதாக தான் இருக்கும் என பலரும் கூறி வருகின்றனர்.

Also Read : அஜித் ஆரம்பிக்கும் மருத்துவ முகாம்.. விடாமுயற்சியில் ஒரு புது முயற்சி

Trending News