செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

தேசிய விருது வாங்கி கொடுத்த தயாரிப்பாளரை அலையவிடும் தனுஷ்.. பேரும் புகழும் வந்ததும் பழசை மறந்து விட்டாரா?

Actor Dhanush: கடின உழைப்பு மட்டும் இருந்தால் சினிமாவில் எப்பேர்பட்டவர்களாக இருந்தாலும் ஜெயித்து விடலாம் என்பதற்கு நடிகர் தனுஷ் மிகப்பெரிய உதாரணம். இவர் சினிமாவிற்குள் வந்த பொழுது வெறும் நெகட்டிவ் விமர்சனங்களை மட்டுமே சந்தித்து வந்தார். இவர் எல்லாம் ஹீரோவா என கேட்டவர்கள் மத்தியில் இன்று தமிழ் சினிமாவின் அடையாள நாயகனாக ஹாலிவுட் வரை சென்று விட்டார்.

தனுசுக்கு தற்போது ரசிகர்கள் ஏராளம். அவருடைய படங்களின் இசை வெளியீட்டு விழாக்களின் போது தன்னுடைய ரசிகர்களுக்கு நிறைய அறிவுரைகள் சொல்லுவார் தனுஷ். ரசிகர்களுக்கு அறிவுரை சொல்லிவிட்டு அதை அவர் பின்பற்றுவது இல்லையோ என்ற சந்தேகத்தை தற்போது வெளியாகி இருக்கும் தகவல் ஒன்று எழுப்பி இருக்கிறது.

Also Read:தனுஷுடன் கைகோர்க்கும் மாஸ் நடிகர்.. எக்ஸ் மாமனாருக்கு போட்டியாக மல்டி ஸ்டார்சுடன் களமிறங்கும் படம்

பொதுவாக நடிகர்கள் தங்களுக்கு என்று ஏதாவது கோட்பாடுகளை வைத்திருந்தாலும், அதை தாண்டி தங்கள் வளர்ச்சி காலத்தில் உதவிய இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், நண்பர்களுக்கும் தங்களின் படங்கள் மூலம் உதவி செய்வது உண்டு. உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் நடிகர் விஜய் சேதுபதி அவருடைய ஆரம்ப காலத்தில் உதவிய இயக்குனர்களுக்காக இன்றுவரை படம் பண்ணிக் கொண்டிருக்கிறார். ஆனால் தனுஷ் இந்த விஷயத்தில் தான் கோட்டை விட்டு இருக்கிறார்

நடிகர் தனுஷ் திருவிளையாடல் ஆரம்பம், பரட்டை என்கிற அழகுசுந்தரம் போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது அவரை முழுமையாக நம்பி பொல்லாதவன் போன்ற ஆக்சன் திரைப்படத்தை தயாரித்தவர் தான் பைவ் ஸ்டார் கதிரேசன் அதன் பிறகு தனுஷின் ஆடுகளம் மற்றும் நையாண்டி படங்களை இவர்தான் தயாரித்தார் தனுஷின் சினிமா கேரியரில் பொல்லாதவன் மற்றும் ஆடுகளம் மிகவும் முக்கியமான திரைப்படங்கள்.

Also Read:தனுசுக்கு ஜோடியாகும் அஜித்தின் மகள்.. 22 வயது வித்தியாசம், கதாநாயகியாக என்ட்ரி கொடுக்கும் பியூட்டி குயின்

தனுஷின் மொத்த நடிப்பு திறமையும் வெளியில் வந்தது பொல்லாதவன் மற்றும் ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் தான். அந்த படங்களை தயாரித்த பைவ் ஸ்டார் கதிரேசன் தனுஷை வைத்து மீண்டும் எப்படியாவது ஒரு படத்தை தயாரித்து விட வேண்டும் என காத்திருக்கிறார். இதற்காக மூன்று வருடங்களுக்கு முன்பே தனுஷிடம் பேசி கால் ஷீட்டும் வாங்கி இருக்கிறார்.

தனுஷ் அதன் பிறகு இதைப்பற்றி அவரிடம் எதுவுமே பேசவில்லையாம். கொடுத்த அட்வான்ஸ் தொகையும் திருப்பி கொடுக்கப்படவில்லை. அடுத்தடுத்து ஹாலிவுட், பாலிவுட் என நடித்துக் கொண்டிருக்கும் இவர் தன்னுடைய வளர்ச்சிக்கு துணையாக இருந்த தயாரிப்பாளரை கண்டுகொள்ளாமல் இப்படி சுற்றலில் விடுவது தனுஷ், தான் கடந்து வந்து பழைய பாதையை மறந்து விட்டார் என்பதையே குறிக்கிறது.

Also Read:அதிர்ஷ்டம் இல்லாத விஜய், தனுஷ்.. துணிந்து கையில் எடுக்கும் சூர்யா, ஒரேடியா காலவாரிடாம பாஸ்!

Trending News