Priya Mani: தென்னிந்திய சினிமாவை பொருத்தவரைக்கும் கவர்ச்சி காட்டாத நடிகைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
இருந்தாலும் லிப்லாக் காட்சிகள் மற்றும் பிகினி உடை அணிவது போன்றவற்றை தைரியமாக ஒரு சில நடிகைகள் தான் செய்திருக்கிறார்கள்.
அதில் ஒருவர் தான் பிரியாமணி. பருத்திவீரன் படத்தில் முத்தழகு கேரக்டர் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை தன் பக்கம் கட்டி இழுத்தவர்.
என்ன முத்தழகு இதெல்லாம்?
திடீரென தெலுங்குக்கு போய் சில வருடங்களில் பிகினி உடையில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடினார். தெலுங்கு ஹீரோ நித்தின் நடித்த துரோணா படத்தில் தான் இந்த பாடல் அமைந்தது.
படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இந்த பாடலை படத்தின் வியாபாரத்திற்காக பயன்படுத்தினார்கள்.
இதனால் பிரியாமணி ரொம்பவே கோபப்பட்டதாகவும் அதன் பின்னர் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து பேசிய காசை விட அதிகமாக கொடுக்கப்பட்டது என செய்திகள் வெளியானது.
இதை அந்த படத்தின் தயாரிப்பாளர் TS ராவ் மறுத்திருக்கிறார். பிரியாமணி இடம் முதலில் கதை சொல்லும் பொழுது இந்த காட்சி பற்றி எதுவுமே சொல்லவில்லை.
80 சதவீதம் படப்பிடிப்பு முடிந்ததும் இயக்குனர் இது குறித்து பிரியாமணியிடம் பேசினார். பிரியாமணி ஒரு பத்து நிமிடம் டைம் எடுத்துக் கொண்டு அவருடைய அம்மாவிடம் பேசி விட்டு வந்து ஓகே சொன்னார்.
பிரியாமணி பிகினி உடை அணிந்த பாடல் காட்சியை வைத்து தான் படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்தது. இதற்காக அவர் எக்ஸ்ட்ரா காசு எல்லாம் கேட்கவில்லை என சொல்லி இருக்கிறார்.