பட ப்ரமோஷனுக்காக இப்படிலாமா பொய் செல்வது?. பெரும் பரபரப்பை கிளப்பிய சூர்யா

Actor Suriya: தமிழ் சினிமாவில் நடிப்பு அரக்கனாக பார்க்கப்படும் சூர்யா, இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்ற போது, ரோப் கேமரா அறுந்து விழுந்ததில் நடிகர் சூர்யா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இந்த விஷயம் சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்படுகிறது. அதன் பின்பு சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் நலமுடன் இருப்பதாக பதிவிட்டிருந்தார். கொஞ்ச நாட்களாகவே கங்குவாவை பற்றி யாரும் பேசவே இல்லை.

சூப்பர் ஸ்டார் ரஜினி மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தைப் பற்றியும், லியோ, தளபதி 68 போன்ற படங்களை பற்றி பேசுகிறார்கள். மேலும் கார்த்திக்- அமீர் விஷயத்தைக் கூட தோண்டி துருவி இப்போது சுவாரசியமாக பேசுகிறார்கள்.

Also Read: அஜித், விக்ரம் தூக்கி எறிந்த 5 படங்கள்.. வம்படியாய் ஐந்தையும் வாங்கி ஜெயித்த ரோலக்ஸ்

எல்லாமே பட ப்ரமோஷனுக்காகவா!.

ஆனால் சூர்யாவின் கங்குவா படத்தைக் குறித்த ஒரு நியூஸ் கூட வெளி வருவதில்லை. ஒருவேளை கங்குவா படத்தை எல்லோரும் பேச வேண்டும் என்று, பட ப்ரமோஷனுக்காக தான் சூர்யா இப்படி பொய் சொல்லி இருக்கிறாரா என்று நெட்டிசன்களால் பேசப்பட்டு வருகிறது.

இது உண்மையா இருக்கலாம், இல்லை பொய்யா கூட இருக்கலாம். அது தெரியல, எப்படியும் சூர்யாவிற்கு ஒன்றும் ஆகலைன்னு அவருடைய ரசிகர்கள் ஹாப்பியா இருக்காங்க. மேலும் சூர்யாவின் அசுரத்தனமான நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் கங்குவா படத்தை திரையில் எப்போது பாப்போம் என்றும் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Also Read: தளபதி 68 விஜய் படமே கிடையாது.. டைட்டில்லயே வெங்கட் பிரபு தரப்போகும் சர்ப்ரைஸ்