2013ஆம் ஆண்டு ஏ எல் விஜய் இயக்கத்தில் தளபதி விஜயின் தலைவா திரைப்படமானது பெரும் அரசியல் சர்ச்சைகளை சந்தித்தது, ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால் வசூல்ரீதியாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை.
இருப்பினும் தளபதியின் படத்திற்கு மவுஸ் எப்பயுமே குறையாது. தற்போது தலைவா படத்திற்கும், தல அஜித்துக்கும் இடையேயான சூப்பரான தகவல் ஒன்றை படத்தின் இயக்குனர் ஏ எல் விஜய் பேட்டி ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஏ எல் விஜய் அஜித்தின் கிரீடம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு பொய் சொல்ல போறோம், மதராசபட்டினம், தாண்டவம், தெய்வத்திருமகள் என பல படங்களை இயக்கியுள்ளார்.
மேலும் ஏ எல் விஜய் அண்மையில் அளித்த பேட்டியின் மூலம், ‘தலைவா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முதன்முதலில் பார்த்தவரே தல அஜித் தானாம்.
அதுமட்டுமில்லாமல் அந்தப் படத்தின் சூப்பர் ஹிட் பாடலான “வாங்கண்ணா வணக்கங்கண்ணா” என்ற பாடலையும் தல அஜித் தான் முதலில் கேட்டுள்ளார்’ என்ற சுவாரசியமான தகவலை தெரிவித்துள்ளார்.
இதனை அறிந்த தல மற்றும் தளபதி ரசிகர்கள் குத்தாட்டம் போட்டு கொண்டாடி வருகின்றனர்.