திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

எப்டுறா! கங்குவா டைட்டில் 1983-ல் வச்சிட்டாங்களா? அர்த்தத்தை பார்த்தா பெரிய சம்பவமா இருக்கும் போல

சூர்யா நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் படத்திற்குப் பிறகு விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கேரக்டரிலும் மற்றும் ராக்கெட்ரி படத்தில் சிறப்பு தோற்றத்திலும் நடித்திருந்தார். அதன் பின் இவருடைய 42வது படம் கடந்த வருடம் தொடங்கி நிலையில் இந்த படத்திற்கான டைட்டில் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்கள்.

அதாவது சூர்யாவின் 42 வது படத்திற்கு கங்குவா என்று வித்தியாசமான பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களை குறித்து வரலாற்றுப் படமாக எடுக்கிறார்கள். மேலும் இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்க இருக்கிறது.

Also read: எதிர்பார்ப்பை மிரளவிடும் சூர்யா 42.. அட்டகாசமான அப்டேட் கொடுத்த டீம்

அத்துடன் இந்த படம் பான் இந்தியா படமாக 10 மொழிகளில் வெளியிட முடிவு செய்து இருக்கிறார்கள். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தை 3டி தொழில்நுட்பத்துடன் எடுக்கப்படுவதால் இவருடைய ரசிகர்கள் இப்படத்தை பார்ப்பதற்கு ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படத்தை இவருடைய நெருங்கிய கூட்டாளியான கே.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். மேலும் இப்படத்தின் டைட்டில் கங்குவா வெளியாகி நிலையில் அதிக ட்ரெண்ட் ஆகி வருகிறது. ஆனால் இந்த கங்குவா டைட்டில் 1983 ஆம் ஆண்டு ஏற்கனவே வைத்திருக்கிறார்கள்.  அதிலும் ரஜினியின் ஹிந்தி படம் டைட்டிலை வைத்துள்ளதாக ரஜினியின் ரசிகர்கள் சர்ச்சையை கிளப்பி வருகிறார்கள்.

Also read: மீண்டும் இணையும் ஆயுத எழுத்து கூட்டணி.. டாப் ஹீரோயினை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய படக்குழு

அத்துடன் இந்த டைட்டிலின் அர்த்தத்தை பார்த்தால் பெரிய சம்பவமாக இருக்கிறது. அதாவது இது கங்குவா அல்லது கெங்குவா என்பது ஒரு பிரபலமான மராத்தி மற்றும் தெலுங்கு மாநிலத்தின் குடும்பப்பெயர். மேலும் கெங்குவா என்பது ஆந்திர பிரதேசத்தின் விஜயநகர மாவட்டத்தில் உள்ள கிராமத்தின் பெயரும் கூட.  அத்துடன் கங்குவா என்றால் “வல்லமையுள்ள வீர சாகா” என்று வர்ணிக்கப்படும் அர்த்தம் இருக்கிறது.

அதாவது 16 வது நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு அரசர் சாகா வரம் கிடைத்து தனது மிகப்பெரிய எதிரியை வீழ்த்துகிறார். அந்த அரசனை பழிவாங்க வேண்டும் என்பதற்காக பல நூற்றாண்டுகள் கழித்து மறு ஜென்மம் எடுத்து வருகிறார். அதனால் நிகழப்போகும் கதை தான் கங்குவா படம். அதனால் இந்த கதைக்கு ஏற்ற மாதிரி இந்த டைட்டிலை வைத்தால் அதிக பார்வையாளர்களை கவரும் வகையில் பரிச்சயமான தலைப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தேர்வு செய்திருக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்த்தபடியே கங்குவா டைட்டில் அதிக பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

Also read: ரிலீசுக்கு முன்பே பல கோடி லாபம் பார்த்த சூர்யா 42.. ஓடிடி உரிமையை தட்டி தூக்கிய பிரபல நிறுவனம்

Trending News