திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

காசு கொடுத்து ரெண்டு மாசம் ஆச்சு.. புலம்பும் பாபி சிம்ஹாவின் மனைவி, ஏமாற்றியது யார்.?

2012ஆம் ஆண்டு காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானவர் பாபி சிம்ஹா. அதனைத் தொடர்ந்து பீட்சா, சூதுகவ்வும், என பல திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார்.

பின்னர் ஜிகர்தண்டா என்ற படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்து தேசிய விருதும் பெற்றார். தமிழ் சினிமாவில் பாபி சிம்மா மற்றும் ரேஷ்மி மேனன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நட்சத்திர தம்பதிகள்.

2015 ஆம் ஆண்டு உருமி என்ற திரைப்படத்தில் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்தார்கள். உருமி படப்பிடிப்பின் போது இருவரும் காதல் வயப்பட்டு, அதன்பின் 2016 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

Reshmi-menon-Cinemapettai.jpg
Reshmi-menon-Cinemapettai.jpg

சமீபத்தில் நடிகை ரேஸ்மி மேனன் தனது இன்ஸ்டாகிராம்பக்கத்தின் மூலம், தான் பணத்தை ஏமார்ந்த விஷயம் குறித்து கூறியுள்ளார். மேலும் அவர் “accessories_for_her” என்ற வலைதள பக்கத்தில் பொருள் ஒன்றை ஆர்டர் செய்து பணம் அனுப்பி உள்ளார்.

ஆனால், 2 மாதங்களாக தனக்கு பொருளும் வரவில்லை, அவர்களிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை என தெரிவித்துள்ளார். அதனால் இதுபோன்ற போலியான பக்கத்தை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

Trending News