தமிழ் சினிமாவில் ஒரு சில இசை இயக்குனர்களை மட்டுமே ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அப்படி கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் திரைப்படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமானவர் இசையமைப்பாளர் ஜிப்ரான். இப்படத்திற்கு பிறகு கமலஹாசனின் ஆஸ்தான இசை அமைப்பாளராகவும் சினிமாவில் வலம் வந்தார்.
இவரது பின்னணி இசையில் வெளியாகும் ஒவ்வொரு தீம் மியூசிக்கும் ரசிகர்களின் செல்போன் காலர் டோன் ஆகவே உள்ளது. அந்த அளவிற்கு பின்னணி இசையின் மூலம் பல கோடி ரசிகர்கள் வைத்துள்ளார் ஜிப்ரான். இதுவரை எந்த இசையமைப்பாளரும் செய்யாத ஒரு விஷயத்தை செய்துள்ளார் ஜிப்ரான் அது என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
படத்தில் இடம்பெறாத சாஹா பட ஹீரோ தீம் மியூசிக்கை NFT Non Fungible Token என்ற முறையில் வெளியிடவுள்ளதாக ஜிப்ரான் அறிவித்துள்ளார். அதாவது இந்த தீம் மியூசிக் ஜிப்ரான் ஒக்கும் படத்தின் இயக்குனருக்கு மிகவும் பிடித்ததாகவும் ஆனால் படத்தின் தன்மையை கருதி இந்த தீம் மியூசிக்கை அப்படத்தில் வெளியிடவில்லை என கூறியுள்ளார்.
ஆனால் தற்போது NFT Non Fungible Token முறையில் படத்தின் தீம் மியூசிக்கை வெளியிடுவதாகவும் அதில் உயரிய தொகை கொடுத்து யாரு வேணாலும் ஏலத்தில் வாங்கிக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தீம் மியூசிக் ஒரே ஒரு நகல் மட்டும் இருக்கும். அதிக தொகையில் ஏலம் எடுப்பவர்களுக்கு அந்த நகல் சொந்தமாகிவிடும்.அந்த நகல் அவர்களுக்கு மட்டுமே சொந்தம் வேறு எந்த இடத்திலும் வெளிவராது என ஜிப்ரான் அறிவித்துள்ளார்.
மேலும் இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் பணத்தில் 50% தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் மீதமுள்ள 50% கொரனோ ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல் தவிக்கும் இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.