வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் முறையில் மது விற்பனை.. இனி பிரச்சனை வராதுல.. குடிமகன்கள் மகிழ்ச்சி

தமிழ் நாட்டில் அரசே டாஸ்மாக் கடைகளை நடத்தி வருகிறது. மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என பாமக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் மெல்ல மெல்ல டாஸ்மாக் கடைகள் குறைக்கப்படும் என அரசு தெரிவித்திருந்தது.

சமீபத்தில், டாஸ்மக் மதுபானக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களுக்கு அச்சிடப்பட்ட பில் வழங்கும் முறை விரைவில் நடைமுறைக்கு வரவிருப்பதாக தகவல் வெளியானது.

அதன்படி, ஏற்கனவே அரக்கோணம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இந்த நடைமுறை இருக்கும் நிஅலியில், சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் பில் வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மதுபானங்களுக்குக் கூடுதல் விலை வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில் மதுபான பிரியர்கள் வீடியோ வெளியிட்டும் அரசுக்கும் இதுகுறித்து புகார்கள் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், மதுபானத்திற்கு ரசீது வழங்கினால் இப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என கூறப்பட்டது.

டிஜிட்டல் முறையில் மது விற்பனை

இந்த நிலையில் இன்று முதல் டிஜிட்டல் முறையில் மது விற்பனை அமலுக்கு வந்துள்ளது. காஞ்சிரபும், செங்கப்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள 220 டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் டிஜிட்டல் முறையில் மதுபானங்களுக்கு ரசீது, க்யூஆர் கோடு மூலம் பணம் செலுத்தும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் சரியான தொகையை மட்டும் கொடுக்க முடியும், பிரச்சனைகள் வராது. இதனால் மதுபானப் பிரியர்கள் பயனடைவர் என கூறப்படுகிறது.

இதுவரை கையில் பணம் கொடுத்துத்தான் மதுபானங்கள் வாங்கப்பட்டு வந்த நிலையில் இந்த டிஜிட்டல் முறையில் மது விற்பனைக்கு மதுபானப் பிரியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

Trending News