சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

சந்தானத்தின் டிக்கிலோனா ரிலீஸ் தேதி அறிவிப்பு.. இணையத்தை கலக்கும் புதிய போஸ்டர்

சந்தானம் சில சறுக்கல்களை சந்தித்தாலும் சுதாரித்துக்கொண்டு ஹிட்டும் கொடுத்து வருகிறார். கடைசியாக அவர் நடிப்பில் வெளிவந்த தில்லுக்கு துட்டு 2, A1 போன்ற படங்கள் வசூல் வேட்டையாடியது.

சந்தானம் கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மூன்று விதமான கெட்டப்பில் நடிக்கின்ற படத்தின் டிக்கிலோனா(dikkilona) ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. ஜென்டில்மேன் படத்தில் கவுண்டமணி பேசும் வசனம் தான் டிக்கிலோனா.

சந்தானம் இதுவரை பார்க்காத லுக்கில் இந்த படத்தில் இருப்பதால் எதிர்பார்ப்பு கிளம்பி விட்டன. மூன்று வேடம் என்பதால் எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டது.

ட்ரெய்லரில் சந்தானத்துடன் சேர்ந்து ஆனந்தராஜ், முனீஸ் காந்த், யோகி பாபு என அனைத்து காமெடி நட்சத்திரங்களும் அடித்திருக்கும் லூட்டிக்கு அளவே இல்லை.

நீண்ட நாட்களாகவே சந்தானத்தின் டிக்கிலோனா திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகப் போவதாக செய்திகள் வந்தாலும் படக்குழுவினர் தொடர்ந்து மறுத்து வந்தனர். எப்படியாவது தியேட்டர்கள் திறந்துவிடக் கூடாதா என்ற எதிர்பார்ப்பிலும் இருந்தனர்.

ஆனால் தற்போதைக்கு தியேட்டர்கள் திறக்க வாய்ப்பில்லை என்பதால் ஜீ5 நிறுவனத்திற்கு டிக்கிலோனா படத்தை விற்றுவிட்டனர். வருகின்ற செப்டம்பர் 10-ஆம் தேதி டிக்கிலோனா படம் வெளியாக உள்ளது.

dikkilona-cinemapettai-01
dikkilona-cinemapettai-01

Trending News