வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படம் கிட்டத்தட்ட ரிலீஸாகி ஒரு மாதம் ஆன நிலையில் படத்தின் வசூல் குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அதாவது இதுவரை வாரிசு படம் கிட்டதட்ட 300 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளதாக கூறியிருந்தனர்.
ஆனால் வாரிசு படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் இந்த வசூல் பொய் என பலரும் கூறி வந்தனர். இந்நிலையில் வாரிசு படம் தில் ராஜுவின் சொந்த இடமான ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கிட்டதட்ட 100 கோடி வசூல் செய்யும் என்றும் இதிலிருந்து 50 கோடி ஷேர் கிடைக்கும் என தில் ராஜு எதிர்பார்த்து இருந்தார்.
Also Read : பயங்கர திட்டத்தோடு உருவாகும் தளபதி 69.. பல மடங்கு லாபத்திற்காக பிளான் போடும் விஜய்
ஆனால் அந்த இடங்களில் தில்ராஜுக்கு வாரிசு படத்தால் கிடைத்த லாபம் என்பது வெறும் 13 கோடிதானாம். இதாவது பரவாயில்லை தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இன்னும் மோசமாக உள்ளது. தில் ராஜுவிடம் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை லலித் 60 கோடிக்கு வாங்கி இருந்தார்.
கடைசியில் லலித்துக்கு தமிழ்நாட்டில் ஷேர் என்பது 67 கோடி தான் கிடைத்துள்ளது. ஆகையால் வெறும் 7 கோடி மட்டுமே லலித் வாரிசு படத்தால் லாபம் பெற்றுள்ளார். ஆனால் அதுவும் அவருக்கு முழுசாக கிடைக்கவில்லை. அதாவது வாரிசு படத்தின் விளம்பரம் மற்றும் ப்ரோமோஷனுகாக 5 கோடி செலவு செய்துள்ளார்.
Also Read : விஜய்க்கு ஒரு நியாயம், அஜித்துக்கு ஒரு நியாயமா?. ஏகே 62 படத்திற்கு மீண்டும் உருவாகும் பிரச்சனை
கடைசியில் எல்லாவற்றையும் கணக்கிட்ட பார்த்தால் லலித்க்கு வெறும் 2 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. மேலும் வாரிசு படம் 300 கோடி வசூல் செய்ததாக சொன்னாலும் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்காமல் ஏமாற்றத்தை தந்துள்ளது.
விஜய் ஒரு டாப் நடிகர் என்பதால் அவரை வைத்து நல்ல லாபம் பார்க்கலாம் என்று தில் ராஜு போட்ட கணக்கு எல்லாமே தற்போது வீணாகி உள்ளது. மேலும் அவர் எதிர்பார்த்த வசூலில் பாதி கூட வாரிசு படத்தால் கிடைக்காததால் இப்போது புலம்பி தவித்து வருகிறாராம்.
Also Read : ஜவான் படத்தின் கேமியோ ரோலில் விஜய் இல்லை.. அண்ணனை தூக்கிட்டு அர்ஜுனுக்கு போட்ட ஸ்கெட்ச்