புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

அடுத்த பட வாய்ப்பிற்காக வாரிசு படத்தை போட்டு காமித்த தில் ராஜு.. ரிலீசுக்கு முன்பே வெளிவந்த விமர்சனம்

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் அதன் ட்ரெய்லரை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். புத்தாண்டு தினத்தன்று வெளியாகி இருக்க வேண்டிய இந்த ட்ரெய்லர் சில வேலை தாமதத்தின் காரணமாக இன்னும் வெளியாகாமல் இருக்கிறது.

இந்நிலையில் வாரிசு திரைப்படத்தை பிரபல நடிகர் ஒருவர் பார்த்துவிட்டு ஆஹா ஓஹோ என்று புகழ்ந்திருக்கிறார். தெலுங்கு திரை உலகில் பிரபல நடிகராக இருக்கும் ராம்சரண் தமிழ் ரசிகர்களுக்கும் ரொம்பவே பரிச்சயமானவர். அவர் நடிப்பில் வெளிவந்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் உலக அளவில் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது அவர் RC15 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Also read: வீட்டை விட்டு துரத்திய விஜய், இப்படி ஒரு நிலை உங்களுக்கு வராமலா போகும்… சாபம் விட்ட தயாரிப்பாளர்

நம்ம ஊரு பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கி வரும் அந்த திரைப்படத்தை வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துக் கொண்டிருக்கிறார். அதனாலேயே ராம்சரண் வாரிசு திரைப்படத்தை முதல் ஆளாக பார்த்துள்ளார். அவருடன் இணைந்து தில் ராஜு மற்றும் இசையமைப்பாளர் தமன் ஆகியோர் படத்தை பார்த்திருக்கின்றனர்.

படத்தை பார்த்த ராம்சரண் விஜய்யின் நடிப்பை ரொம்பவும் புகழ்ந்து பாராட்டி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் படம் நிச்சயம் வெற்றி பெறும் என இயக்குனர் வம்சி மற்றும் பட குழு ஆகியோருக்கும் அவர் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். அந்த வகையில் ரிலீசுக்கு முன்பே வாரிசு படத்திற்கு ராம்சரண் தன்னுடைய முதல் விமர்சனத்தை கொடுத்திருக்கிறார்.

Also read: சென்சார் போர்டுக்கு தண்ணி காட்டிய வாரிசு.. உண்மை வெளிப்பட்டதால் திக்குமுக்காடிய வம்சி

இது படத்திற்கு பெரிய பிரமோஷனாக அமைந்துள்ளது. மேலும் படத்தை தில்ராஜு முதல் ஆளாக ராம் சரணுக்கு போட்டு காட்டியதற்கு பின்னால் ஒரு காரணமும் இருக்கிறது. அதாவது தற்போது அவர்கள் இணைந்துள்ள RC15 170 கோடி செலவில் மிகப் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது. பல வருடங்களுக்குப் பிறகு ஷங்கர் படத்தை இயக்குவதால் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து எடுத்து வருகிறாராம்.

அதனாலேயே இந்த திரைப்படம் தெலுங்கு திரையுலகில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் இந்த திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் ராம்சரணின் கால்ஷூட்டை பெறுவதற்காகவே தில் ராஜு இதை செய்திருப்பதாக பேசப்படுகிறது. இதன் மூலம் இவர்களின் கூட்டணி அடுத்ததாக இணையவும் அதிக வாய்ப்பு இருக்கிறதாம். விரைவில் இதற்கான அறிவிப்பு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறது திரையுலக வட்டாரம்.

Also read: ஆடியோ லான்ச்சுக்கு பொருத்தமில்லாமல் வந்த விஜய்.. பரபரப்பை கிளப்பிய இசையமைப்பாளரின் தடாலடி பேச்சு

Trending News