வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

தில் ராஜுவால் ஏற்பட்ட பெரிய தலைவலி.. தேவையில்லாத பஞ்சாயத்தில் சிக்கிய தனுஷ், சிவகார்த்திகேயன்

Dhanush – Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் ஏற்கனவே தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு இடையே இருக்கும் பனிப்போர் எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான். ஏற்கனவே இவர்கள் பஞ்சாயத்து பெரிய பஞ்சாயத்து ஆக போய்க்கொண்டிருக்கும் நேரத்தில், தயாரிப்பாளர் தில் ராஜு தன்னுடைய பங்குக்கு இரண்டு பேரையும் பெரிய சிக்கலில் இழுத்து விட்டிருக்கிறார். அட என்னப்பா தில்ராஜுக்கு இதே வேலையா போச்சு என இப்போது தமிழ் சினிமா ரசிகர்கள் பொங்கி வருகிறார்கள்.

தயாரிப்பாளர் தில் ராஜுவை கோலிவுட் வட்டாரம் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. வாரிசு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த தெலுங்கு தயாரிப்பாளர் இவர்தான் தமிழ்நாட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று சர்ச்சையை கொளுத்தி போட்ட பரமாத்மா. இவர் லேசாக பற்ற வைத்த தீ தான் கடந்த வருடம் முழுக்க காட்டுத் தீயாக விஜய் மற்றும் ரஜினி ரசிகர்களுக்கு இடையே கொழுந்து விட்டு எரிந்தது.

1998 ஆம் ஆண்டில் சினிமா விநியோகஸ்தராக தன்னுடைய தொழிலை தொடங்கிய தில்ராஜு தற்போது தெலுங்கு சினிமாவின் மிகப்பெரிய கை. முக்கியமான தயாரிப்பாளராக இவர் இருப்பதால், ஆந்திராவில் இருக்கும் பல தியேட்டர்கள் இவருடைய கைவசம் தான். இதுதான் கடந்த பொங்கல் தினத்தன்று வாரிசு படம் ஆந்திராவில் ரிலீஸ் ஆவதற்கான பெரிய சர்ச்சையை உண்டு பண்ணியது.

Also Read:வெங்கட் பிரபுவின் கோரத்தாண்டவம்.. விஜய் கொடுக்கும் டார்ச்சரால் ரணகளமாக மாறிய படப்பிடிப்பு

போன வருடம் துணிவு மற்றும் வாரிசு படம் ஒரே நாளில் ரிலீஸ் ஆகி தமிழ் சினிமா ரசிகர்களை உலுக்கியது. அதேபோன்று இந்த வருடம் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் அயலான் ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த இரண்டு படங்களின் தெலுங்கு ரிலீஸ் உரிமையை வாங்கி இருப்பவர் தயாரிப்பாளர் தில் ராஜு.

பஞ்சாயத்தை இழுத்துவிட்ட தில் ராஜு

அதே நாளில் தெலுங்கில் முக்கிய ஹீரோக்களாக இருக்கும் மகேஷ்பாபு, நாகார்ஜுனா மற்றும் வெங்கடேசின் படங்களும் ரிலீஸ் ஆக இருக்கின்றன. தில் ராஜு வழக்கம்போல தன்னுடைய வேலையை காட்டி விட்டார். அவருடைய அதிகாரத்தை பயன்படுத்தி ஆந்திராவில் பெரும்பாலான தியேட்டர்களை தன் கைவசம் கொண்டு வந்து அயலான் மற்றும் கேப்டன் மில்லரை பந்தயத்தில் இறக்குவதற்கு ரெடியாக இருக்கிறார்.

வழக்கம் போல பிற மொழி படங்கள் முக்கியமான நாளில் ரிலீஸ் செய்யக்கூடாது என இப்போது தெலுங்கு சினிமாவில் பிரச்சனை பண்ண ஆரம்பித்து விட்டார்கள். தில் ராஜூவை ஒழித்து கட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு தெலுங்கு சினிமாக்காரர்கள் தங்களுடைய பஞ்சாயத்தை ஆரம்பித்து விட்டார்கள். அவர்களுடைய பஞ்சாயத்தில் இப்போது பலிக்கிடாவாக சிக்கியிருப்பது தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் தான்.

Also Read:அச்சு அசல் இளம் வயது ரஜினியை போலவே இருக்கும் தனுஷின் மூத்த மகன்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

Trending News