வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய்யை கெடுத்த தில் ராஜ்.. இனி புலம்பி என்னத்துக்கு வச்ச ஆப்பு கொஞ்சம் பெருசுதான்

கோலிவுட் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதல் இடத்தில் தளபதி விஜய் உள்ளார். பீஸ்ட் படத்தை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது.

அஜித்தின் துணிவு படத்திற்கு போட்டியாக வாரிசு படம் வெளியாவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஏனென்றால் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்குப் பிறகு மாஸ் நடிகர்களான அஜித், விஜய் படங்கள் மோதிக்கொள்ள இருக்கிறது.

Also Read : விஜய்க்கு மரியாதை அவ்வளவுதான்.. வாரிசு ரிலீஸ் குறித்து வெளுத்து வாங்கிய பிரபலம்

இந்நிலையில் தில் ராஜுவால் தமிழ் சினிமாவில் உள்ள தயாரிப்பாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள். அதாவது விஜய் கடைசியாக நடித்த பீஸ்ட் படத்திற்கு 100 கோடி சம்பளம் பெற்றுள்ளார். தெலுங்கில் விஜயை புக் செய்வதற்காக தில்ராஜு 125 கோடி சம்பளம் கொடுத்துள்ளார்.

ஒரேடியாக 25 கோடி அதிகமாக கொடுத்ததால் விஜய்யும் வாரிசு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆகையால் தற்போது விஜய்யின் சம்பளம் 125 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவை பொருத்தவரையில் 5 கோடி அளவில் தான் சம்பளத்தை உயர்த்துவார்கள்.

Also Read : இப்ப வாங்க ஒரு கை பார்க்கலாம், நிம்மதி பெருமூச்சு விட்ட விஜய்.. உச்சகட்ட பயத்தில் துணிவு

அதுவும் சூப்பர் ஸ்டாரின் அடுத்தடுத்த படங்கள் தோல்வியை சந்தித்து வருவதால் ரஜினியின் சம்பளம் குறைந்து கொண்டே போகிறது. ஆனால் தற்போது விஜய்க்கு திடீரென 25 கோடி சம்பளம் ஏற்றினதும் தயாரிப்பாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருகிறார்கள்.

மேலும் விஜய் தான் வாங்கிய 125 கோடி சம்பளத்தில் இருந்த இறங்கி வர மாட்டார். தேவையில்லாமல் சும்மா இருந்த சங்கை ஊதி கெடுப்பது போல விஜய்யை உசுப்பேற்றி அதிக சம்பளம் கொடுத்ததால் தமிழ் சினிமாவில் உள்ள தயாரிப்பாளர்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர்.

Also Read : விஜய் அப்பாவை பிரிய இவர்தான் முக்கிய காரணம்.. கண்மூடித்தனமாக நம்பியதால் காத்திருக்கும் ஆப்பு

Trending News