திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சத்தமே இல்லாமல் மணிரத்னம் செய்த தில்லாலங்கடி வேலை.. பொன்னியின் செல்வனில் காக்கப்பட்ட சீக்ரெட்ஸ்

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை வெளியான தமிழ் திரைப்படங்களிலேயே குறுகிய காலத்தில் அதிக வசூலை பெற்ற முதல் படமும் இதுதான். மேலும் உலக அளவில் கொண்டாடப்படும் இப்படம் தமிழ் சினிமாவுக்கு மிகப் பெரிய பெருமையை தேடிக் கொடுத்துள்ளது.

இதற்கு ஒரே காரணம் மணிரத்னம் மட்டுமே. பல நட்சத்திரங்களின் கூட்டு முயற்சியாக இந்த திரைப்படம் வெளிவந்திருந்தாலும் மணிரத்தினம் என்ற ஒற்றை மனிதர் இல்லை என்றால் இது நிச்சயம் சாத்தியமாகி இருக்காது. அந்த அளவுக்கு அவர் இப்படத்தின் ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக இருந்தாராம்.

Also read:பொன்னியின் செல்வனுக்கு 11 வருடத்திற்கு முன்பே மணிரத்தினம் போட்ட பிள்ளையார் சுழி.. மொத்தத்தையும் கெடுத்து சின்னாபின்னமாக்கிய விக்ரம்

அதிலும் அவர் படக்குழுவினருக்கே தெரியாமல் பல விஷயங்களை ரகசியமாகவே செய்திருக்கிறார். அந்த வகையில் ஷூட்டிங் ஸ்பாட் எங்கு இருக்கிறது என்ற விஷயமே நடிகர்கள் யாருக்கும் தெரியாதாம். விடிகாலையில் எழுந்திருக்கும் அவர்களை வாகனங்கள் வந்து படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்துச் செல்லுமாம்.

அவர்கள் அங்கு போவதற்குள்ளாகவே அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்குமாம். அந்த அளவுக்கு மணிரத்னம் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் படத்தின் விஷுவல் எபெக்ட் சம்பந்தப்பட்ட பணிகளை கூட அவர் மும்பையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் பரம ரகசியமாக செய்து இருக்கிறார்.

Also read:வாழ்நாள் வசூலை 3 நாட்களில் குவித்த பொன்னியின் செல்வன்.. மணிரத்தினத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி

இந்த பணிகளை அவர் சென்னையில் செய்யவில்லை. ஏனென்றால் தேவை இல்லாமல் படம் வெளிவருவதற்கு முன்பே அது சம்பந்தப்பட்ட விஷயங்கள் மீடியாவில் கசிந்து விடக்கூடாது என்பதற்காகத்தான். இப்படி சீக்ரெட்டாக அனைத்தையும் செய்ததால் தான் படம் இன்று மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

தற்போது கோடிக்கணக்கில் வசூலை பெற்று வரும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த வருட கோடைக்குள் வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் அனைத்தும் முடிந்த நிலையில் மற்ற வேலைகள் அனைத்தும் ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது.

Also read:பொன்னியின் செல்வன் 2ஆம் பாகம் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. மொத்தத்தையும் சுருட்டி வாரிய மணிரத்தினம்

Trending News