கார்த்தியின் நடிப்பில் சர்தார் படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. உளவுத்துறை அதிகாரியாக கார்த்தி நடித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. இதைத்தொடர்ந்து அவர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளிவர இருக்கிறது.
இந்நிலையில் கார்த்தி பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவுக்கு வில்லனாக களமிறங்க இருக்கிறார். தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் மகேஷ் பாபு தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் நடிக்கிறார். மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த திரைப்படத்தில் ரொம்பவும் பவர்ஃபுல்லான வில்லன் கதாபாத்திரம் ஒன்றும் இருக்கிறது.
Also read:சர்தார் பட ரிலீஸுக்கு வந்த திடீர் சிக்கல்.. பதறிப்போய் பெரிய இடத்திற்கு ஓடிய தயாரிப்பாளர்
இதற்காக பல நடிகர்களை யோசித்த ராஜமவுலி இறுதியில் கார்த்தி தான் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். கதையைக் கேட்ட கார்த்திக்கு அந்த கதாபாத்திரம் ரொம்பவே பிடித்திருக்கிறது. அதனால் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று அவர் சம்மதம் தெரிவித்துள்ளார்.
விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவர இருக்கிறது. தற்போது பான் இந்தியா திரைப்பட இயக்குனராக இருக்கும் ராஜமௌலியின் இயக்கத்தில் நடிக்க பல நடிகர்களும் போட்டி போட்டு வருகின்றனர். அந்த வகையில் கார்த்திக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பது அவரை நிச்சயம் வேற லெவலுக்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also read:சர்தார் படத்தின் கதையை உளறிய கார்த்தி.. போற போக்குல சிவகார்த்திகேயனை சீண்டி விட்ட சம்பவம்
இந்த செய்தி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் நடிக்க நடிகர் சூர்யாவிடம் கேட்கப்பட்டது. ஆனால் அப்போது அவர் வேறு திரைப்படங்களில் கமிட் ஆகி இருந்த காரணத்தால் அப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. அது இப்போது வரை அவருக்கு பெரிய குறையாக இருக்கிறது.
அந்த வகையில் அண்ணன் தவறவிட்ட வாய்ப்பு தற்போது தம்பிக்கு கிடைத்துள்ளது. இப்படத்தில் கார்த்தியின் கதாபாத்திரம் கைதி படத்தில் வரும் டில்லி கேரக்டர் போன்று நிச்சயம் ரசிகர்களை கவரும் என்று கூறுகின்றனர். அதனால் கார்த்தியின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
Also read:நிறைவேறுமா ராஜமௌலியின் கனவு.? சர்வதேச அளவில் 14 பிரிவுகளில் போட்டி போடும் ஆர்ஆர்ஆர்