வியாழக்கிழமை, பிப்ரவரி 6, 2025

ஆறுதல் பரிசாக தில்ராஜ்க்கு கிடைத்த 50 கோடி.. ஐடி ரெய்டு அனுப்பியும் அடங்காத அசுரன்

தில்ராஜ் இந்த பொங்கலுக்கு இரண்டு படங்கள் தயாரித்து வெளியிட்டார். பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவான கேம் சேஞ்சர் மற்றும் தெலுங்கு நடிகர் வெங்கடேசையை வைத்து சங்கராந்திக்கி வஸ்தனம் என்ற ஒரு படத்தை வெளியிட்டார்.

இதில் கேம் சேஞ்சர் படம் கிட்டத்தட்ட 400 கோடி பட்ஜெட்டில் உருவானது. ஆனால் அந்த படம் 180 கோடிகள் மட்டுமே வசூல் செய்தது. இதனால் இந்த படத்தின் மூலம் நஷ்டம் அடைந்தார் தில்ராஜ். தன்னுடைய சொத்துக்களை அடமானம் வைத்து தான் இந்த படத்தை தயாரித்தார்.

இரண்டு பெரிய பட்ஜெட் படங்கள் ஒரே நேரத்தில் வெளியிட்டதால் சமீபத்தில் அவர் வீட்டில் கூட ரெய்டு நடைபெற்றது. ஆனால் அந்த ரெய்டடில் எதுவும் சிக்காமல் புஷ் என்று போனது. கேம் சேஞ்சர் படத்தால் பெரிய அப்சட்டில் இருந்த தில்ராஜுக்கு மற்றொரு படம் ஆறுதலாக அமைந்தது.

வெங்கடேஷ், மீனாட்சி சவுத்ரி, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்றவர்கள் நடிப்பில் உருவான சங்கராந்திக்கி வஸ்தனம் படம் ஆந்திராவில் செம ஹிட் ஆனது. கிட்டத்தட்ட ஐம்பது கோடிகளில் எடுக்கப்பட்ட இந்த படம் 220 கோடிகள் வசூலித்து சாதனை செய்தது. கேம் சேஞ்சர் படம் தோல்வி அடைந்தாலும் இது அவருக்கு ஆறுதலாக அமைந்தது

சங்கராந்திக்கி வஸ்தனம் படத்தின் பட்ஜெட், இதர செலவுகள் போக 50 கோடிகள் லாபம் மட்டும் பார்த்துள்ளார் தில்ராஜ். ஒரு பக்கம் சங்கரால் பெரிய நஷ்டம் அடைந்தாலும் ஆறுதலாக இவருக்கு இந்த தொகை கிடைத்தது கொஞ்சம் தெம்பை கொடுத்துள்ளது.

Trending News