எல்லாத்தையும் இழந்த தில்ராஜுக்கு அடுத்த அடி. பொங்கலுக்கு ரிலீசான 2 படங்களால் வந்த ஆபத்து

Dilra
Dilra

தில்ராஜ் இந்த பொங்கலுக்கு இரண்டு படங்கள் தயாரித்து வெளியிட்டார் அதில் ஒன்று சங்கர் இயக்கத்தில் உருவான “கேம் சேஞ்சர்”. இந்த படம் சுமார் 450 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இதுவரை 140 கோடிகள் மட்டுமே வசூலித்து, அவருக்கு தலைவலியை கொடுத்து வருகிறது.

“சங்கராந்ததி வஸ்தனம்” என்ற தெலுங்கு படத்தையும் தயாரித்தார். இந்த இரண்டு படங்களையும் ஒருசேர இந்த பொங்கலுக்கு வெளியிட்டார். இந்த படத்தை கிட்டத்தட்ட 100 கோடி செலவழித்து எடுத்துள்ளார். இதுவரை 150 கோடிக்கு மேல் வசூலித்து நல்ல லாபத்தை கொடுத்து வருகிறது.

கேம் சேஞ்சர் படத்தில் விட்ட காசை இந்த படத்தில் கொஞ்சம் ஈடு கட்டி உள்ளார். அதற்குள் இவர் இரண்டு பெரிய பட்ஜெட் படங்கள் வெளியிட்டுள்ளார் என அவரது எல்லா இடங்களிலும் IT Ride இன்று நடந்து வருகிறது.

அவருக்கு சொந்தமான திரையரங்குகள், வியாபாரம் செய்யும் இடம் , வீடு என எல்லா இடங்களிலும் ரைடு நடைபெற்று வருகிறது. அவரது மகன், தம்பி என நெருக்கமான உறவுகள் அனைவரது இடத்திலும் வருமானவரித்துறை சூழ்ந்துள்ளனர். அங்கேயும் ரைடு நடந்து வருகிறது.

ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட தில்ராஜ் அங்கே மிகவும் ஆளுமை மிக்கவர். தியேட்டர் உரிமையாளராகவும், திரைப்படங்கள் தயாரித்து விநியோகம் செய்து வரும் முக்கிய விஐபியாகவும் இருக்கிறார். தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு படத்தை தயாரித்தார். இப்பொழுது கேம் சேஞ்சர் பட தோல்வியால் தனது சொத்துக்களை பாதி இழந்துள்ளார்.

Advertisement Amazon Prime Banner