திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

வாரிசு நடிகருக்கு வாய்ப்பு கொடுக்கும் விஜய் சேதுபதி.. அடுத்த படத்தின் அப்டேட்!

மேடைப்பேச்சாளர், பட்டிமன்ற நடுவர், காமெடி நடிகர் என பன்முகத்திறமை கொண்டவர் திண்டுக்கல் ஐ லியோனி. இப்போது தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டு பெருமைக்கு சேர்க்கப்பட்டார்.

இப்போது இவரது மகன் அறிமுகமாகும் படத்தை இயக்குனர் சீனு ராமசாமியிடம் உதவி இயக்குனராக இருந்த விஜயகுமார் இயக்க விருக்கிறார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தளபதி விஜயின் உறவினரும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ இப்படத்தை தயாரிக்க இருப்பதாக ஒரு தகவல் வந்திருந்தது.

இப்படத்தில் இப்போது புதிய அப்டேட்டாக சீனு ராமசாமியின் விருப்பமான நாயகனும் தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத நடிகருமான மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் இணைந்துள்ளார் என்பது பெரிதும் பேசப்படுகிறது.

vijaysethupathi-01
vijaysethupathi-01

தென்மேற்கு பருவக்காற்று படப்பதிவு காலத்திலிருந்து இயக்குனர் சீனு ராமசாமியிடம் உதவி இயக்குனராக இருந்தவர் விஜயகுமார் என்பதும். விஜய் சேதுபதிக்கு டயலாக் ப்ளோ டயலாக் டெலிவரி என அனைத்தும் அருகில் அமர்ந்து கன்னியமாக சொல்லித்தந்து மக்கள் செல்வனை மேடை ஏற்றிய நன்றிக்கடனுக்காக மக்கள் செல்வன் ஒப்புக்கொண்டுள்ளார் என்றும்.

ஆசிரியராக படத்தில் வலம் வருவார் என்றும் கூறப்படுகிறது. மேலும் அந்த கேரக்டர் எவ்வளவு நேரம் படத்தில் இடம்பெறும் என்பது குறித்து இப்போது வரை தகவல் ஏதுமில்லை.

Trending News