சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

ரசிகரை ம*று என்று திட்டிய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்.. அப்படி என்ன சொல்லிட்டான் அந்த பையன்?

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவரை மயிறு என்று திட்டிய பதிவு செம வைரலாக பரவி வருகிறது. இதன் மூலம் சில சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் தினேஷ் கார்த்தி.

பிரபல கிரிக்கெட் வீரர் தோனிக்கு முன்பே இந்திய அணியில் விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டவர் தான் தினேஷ் கார்த்திக். அவருக்குப்பின் வந்த எம் எஸ் தோனி இந்திய அணிக்காக கேப்டனாக செயல்பட்டார்.

ஆனால் பல வருடமாக தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் வாய்ப்பு இல்லாமல் தடுமாறி விழுந்தார். அப்போது ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டியில் சேர்க்கப்படுவதும், கழட்டி விடுவதுமாக அவரது கேரியர் சென்று கொண்டிருக்கிறது.

டெஸ்ட் போட்டிகளில் கிடைத்த ஒரு சில வாய்ப்புகளையும் தவற விட்டதால் தற்போது ஐபிஎல் போன்ற லீக் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். இனிமேலும் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்குமா? என்றால் சந்தேகம்தான்.

இந்நிலையில் பிரபல சினிமா நடிகர் வையாபுரி சமீபத்தில் போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை வெளியிட்டார். அவரை பார்ப்பதற்கு பிரபல கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் போலவே இருப்பதாக மீம்ஸ்கள் இணையத்தில் செம வைரலாக பரவியது.

vaiyapuri-meme-cinemapettai
vaiyapuri-meme-cinemapettai

சும்மா இருக்காமல் ஒரு ரசிகர் அந்த மீம்சை தினேஷ் கார்த்திக்கு, ஸ்மார்ட்டா இருக்கனா நீ என்று கூறி அனுப்பி வைத்தார். அதைப் பார்த்த தினேஷ் கார்த்திக் செம டென்சனாகி, என்ன ம*று கண்ணுடா உன்னோடது, அது வையாபுரி ம*று என திட்டி விட்டார்.

dk-harsh-reply
dk-harsh-reply

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்ற கணக்காக கம்முனு இருந்தவரை வம்புக்கிழுத்து கண்ட படி திட்டு வாங்கிக் கொண்டார் அந்த ரசிகர்.

Trending News