ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அமீருக்கு அல்வா கொடுத்த கார்த்தி.. ரெண்டு பேருக்கும் இவ்வளவு பெரிய பஞ்சாயத்தா?

Karthi 25-Ameer: நடிகர் கார்த்தி நடித்த ஜப்பான் படம் வரும் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தில் அனு இமானுவேல், கே எஸ் ரவிக்குமார், சுனில், விஜய் மில்டன், வாகை சந்திரசேகர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஜப்பான் படம் கார்த்திக்கு 25 ஆவது படம் என்பதால், இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மற்றும் கார்த்தி 25 என இணைத்து கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கார்த்தி 25 நிகழ்ச்சியை இன்னும் சிறப்பிக்கும் வகையில், அவரை வைத்து படம் இயக்கிய சிறுத்தை சிவா, பிஎஸ் மித்ரன், லோகேஷ் கனகராஜ், லிங்குசாமி, பா ரஞ்சித், எச் வினோத் போன்ற இயக்குனர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். ஆனால் கார்த்தியை வைத்து முதன் முதலில் படம் இயக்கிய அமீர் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை.

இயக்குனராக வேண்டும் என ஆசைப்பட்ட கார்த்தியை நடிகர் ஆக்கியது அமீர் தான். சூர்யா அத்தனை வருடங்கள் நடித்து வாங்கிய பெயரை, கார்த்தி பருத்திவீரன் என்னும் ஒரு படத்திலேயே வாங்கி விட்டார். அந்த ஒரு படம் தான் கார்த்தியை தென் மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய நடிகனாக இன்று வரை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறது.

கார்த்தியின் சினிமா வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்ட அமீர் ஏன் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை என்பதுதான் எல்லோருடைய மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. பருத்திவீரன் படம் ரிலீஸ் ஆன பிறகு அமீர் மற்றும் கார்த்தி தரப்பினிடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் இவர்களுக்குள் பேச்சு வார்த்தை இல்லை எனவும் சொல்லப்படுகிறது.

இயக்குனர் அமீர் அந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை என்றாலும், சூர்யா மற்றும் கார்த்தி பேசும் பொழுது அவருக்கு நன்றி சொல்லி இருக்கிறார்கள். கார்த்திக்கு நடிப்பில் மிகப்பெரிய பெயர் வாங்கி கொடுத்த ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இயக்குனர் செல்வராகவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் அந்த விஷயம் அமீர் அளவுக்கு பேசப்படவில்லை.

கார்த்தி தன்னுடைய முதல் பட இயக்குனர் அமீரை மறந்துவிட்டார் என்பது போல் சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது. அதிலும் அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் பா ரஞ்சித் பற்றி கார்த்தி பேசியதும், அமீர் அந்த நிகழ்ச்சிக்கு வராததையும் ஒப்பிட்டு நிறைய வதந்திகளும் பரவி வருகிறது.

Trending News